Categories: Cinema News latest news

மக்கள் முட்டாள் இல்ல.. நீ தான் மடையன்.. லோகேஷை சாடிய யாஷின் இயக்குனர்..!

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராக இருந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தால் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதில் அடுத்தக்கட்டமாக யாஷை வைத்து அடுத்த படம் இயக்க இருக்கும் தமிழ் இயக்குனர் பிஎஸ் மித்ரன் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பிஎஸ் மித்ரன் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, இப்போது இருக்கும் ரசிகர்கள் தியேட்டர் வருவது கதைக்காக இல்லை. தங்களுக்கு பிடித்த நாயகர்களை தியேட்டரில் பார்க்க தான் வருகிறார்கள். 2000த்தில் இருந்து 2008 வரை நாயகர்களை சினிமா உருவாக்கியது.

இதையும் படிங்க: ஜோதிகா தான் வேண்டும்..! அசினை திட்டம் போட்டு தூக்கிய சூர்யா..! எந்த படத்தில் தெரியுமா?

ஆனால் இன்று அவர்களை பார்க்க மட்டுமே தியேட்டர் வருகிறார்கள். ரொம்ப அரிதாக மட்டுமே கதைக்காக வருகிறார்கள். இன்று அது கம்மி தான். கோலிவுட்டில் ஒவ்வொரு முறையும் ஒரு ட்ரெண்ட் இருக்கும். அது அவ்வப்போது மாறிகொண்டே இருக்கும். ஹீரோ படம் மிஸ் ஆனதுக்கே சூப்பர் ஹீரோ படமாக ப்ரோமோட் செய்தது ஒரு காரணம்.

நம்ம சொல்ல வந்த எமோஷனை சரியாக கொடுக்காமல் போனதே ஒரு படம் ப்ளாப் ஆனதன் காரணமாக பார்க்கப்படுகிறது. அவங்க மிஸ் பண்ணாங்கனு நம்ம கேள்வி கேட்கவே முடியாது. அவங்க நோட் பண்ணாத மாதிரி படம் எடுத்தது நம்ம தப்பாக இருக்கும். நம்ம ஆடியன்ஸை கன்வே செய்யாததால் என்னை தான் மடையன் என திட்டிக்கொள்வேன்.

இதையும் படிங்க: ப்ரோமோ பொறுக்கியா… அதிரும் பிக்பாஸ் இல்லம்.. தினேஷ்-விஷ்ணு இடையே வெடித்த மோதல்..!

இவரின் பேட்டியை கேட்கும் போது லியோ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் டிகோடிங் என லோகேஷ் கனகராஜ் சில பேட்டி அளித்தார். அப்படி பேட்டி கொடுத்து புரிய வைக்க ட்ரை செய்ததையே மித்ரன் சாடியதாக ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர். யாஷின் அடுத்த படத்தினை பிஎஸ் மித்ரன் தான் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan