சிவாஜி நடிப்பு கொஞ்சம் கம்மிதான்!.. கமலிடம் சண்டைபோட்டு வெளியேறிய நடிகர்!.. அட அவரா!..

by சிவா |   ( Updated:2024-02-25 07:40:23  )
kamal
X

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி எப்படிப்பட்ட நடிகராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்புக்கே இலக்கணமாக மாறியவர் இவர். இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

சாதாரண மனிதர் முதல் கடவுள் அவதாரம் வரை எந்த வேடத்தில் நடித்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். அதனால்தான் அவருக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னமும் அவரின் நடிப்பை பற்றி முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் சிலாகித்து எழுதுபவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சிவாஜியின் ஆஸ்தான இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…

அதேபோல் நடிகர்கள் பலரும் சிவாஜியின் நடிப்புக்கு தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள்தான். எம்.ஜி.ஆரே சிவாஜியின் நடிப்பை ரசிக்கும் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாது. ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் சிவாஜியின் நடிப்புக்கு ரசிகர்கள்தான். சிவாஜியின் நடிப்பு தொடர்பாக கமலிடம் சண்டை போட்டு படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய ஒரு நடிகர் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

80களில் அதிக படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர் இவர். அப்போது கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களில் அதிக அளவில் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் ராஜபார்வை. இது கமலின் 100வது திரைப்படம்.

இதையும் படிங்க: ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு!.. எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!.. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்!..

இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘ஒருநாள் சிவாஜி பற்றி கமலும், நானும் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஹிந்தி படமான மொகல் ஏ ஆசாம்’ படத்தில் பிரித்திவிராஜ் கபூரின் நடிப்பு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி காட்டிய நடிப்பை விட சிறப்பாக இருந்தது’ என கமல் சொல்ல எனக்கு கோபம் வந்துவிட்டது. அவரிடம் சண்டை போட்டுவிட்டு படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போய்விட்டேன்.

அதனால் படப்பிடிப்பு நின்று போனது. அதன்பின் கமலும் அவரின் அண்ணன் சாருஹாசனும் என்னை சமாதனம் செய்து படத்தில் நடிக்க வைத்தனர்’ ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.

Next Story