விஜய் கூட நீ நடிச்சாலே பிளாப் தான்.! ரசிகரின் கேள்விக்கு வேற மாதிரி பதிலடி கொடுத்த சென்சேஷனல் நடிகர்.!

தமிழ் சினிமாவில் படு பிசியாக நிற்க கூட நேரமில்லாமல் நடித்து வந்த நடிகர் என்றால் அது யோகி பாபு தான். ஒரு சமயம் அவர் இல்லாத படம் தமிழ் சினிமாவில் இல்லை எனும் அளவுக்கு எல்லா படத்திலும் அவர் இருந்தார். அந்தளவுக்கு பிஸியான நடிகர் யோகி பாபு.

ஒரு சமயம். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் முனிஷ்காந்திற்கு பதிலாக பேசப்பட்டவர் யோகிபாபு, ஆனால் கால்ஷீட் இல்லையாம். அவர் விஜயுடன் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பிகில், நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு, விஜய் உடன் இணைந்து நடித்து இருந்தார். இது குறித்து டிவிட்டரில் ஒரு ரசிகர், ' நீ விஜய் கூட நடிச்ச 3 படமும் பிளாப். சர்க்கார் பிளாப், பிகில் பிளாப், பீஸ்ட் பிளாப், அடுத்து தளபதி 66-ஆ? ' என்பது போல பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்களேன் - கமல் ரசிகர்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டேன்., ஜாக்கிரதை.! மேடையிலேயே மிரட்டிய பிரபல தயாரிப்பாளர்.!

அதற்கு தனது பாணியில் யோகி பாபு தேங்கயூபா என தங்கிலீஷில் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66வது திரைப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

யோகி பாபு நடித்த விஜய் படங்களில் சர்கார், பீஸ்ட் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், பிகில் திரைப்படம் இதுவரை வந்த விஜய் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.

 

Related Articles

Next Story