3 வேளை சோத்துக்கு எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கு: யோகிபாபுவிடம் சொன்ன விஜய்

Published on: March 10, 2026
vijay with yogibabu

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் யோகிபாபுவும் ஒருவர். 2009-ல் இயக்குனர் அமீர் நடித்த ‘யோகி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரையே தனது பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டு ‘யோகி பாபு’ ஆனார். ஆரம்பத்தில் பையா, வேலாயுதம், கலகலப்பு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில், கூட்டத்தில் ஒருவராகவே நடித்து வந்தார். 2014-ல் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த படத்தில் வரும் பன்னி மூஞ்சி வாயா வசனம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

யோகிபாபு விஜயுடன் பல் படங்களில் நடித்துள்ளார். அதில் சர்க்கார் படமும் இன்று. அந்த படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் ஒன்றை யோகிபாபு பகிர்ந்தார். அவர் கூறியபோது, சர்க்கார் படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. சிங்கிள் டேக்கில் ஆடவேண்டும். விஜய் அதனை சரியாக செய்தார். பிறகு என் தோளை பிடித்து என் கால் முட்டியை பாருடா என்று சொல்ல நானும் தொட்டு பார்த்தேன். கடகடவென ஆடியது. அதற்கு விஜய் , 3 வேளை சோத்துக்கு எவ்வளவு பாடுபடவேண்டியது இருக்கு பாரு என்று சொன்னார் என யோகிபாபு கூறினார்.