ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். பொங்கலை குறிவைத்து கடந்த மாதம் 9ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்தார்கள். ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் அந்த தேதியில் வெளியிட முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு படத்தை மறுத்தணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
முதலில் சாதகமாக தீர்ப்பு வந்து, அதன்பின் தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டு, அதன்பின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றம் சென்று, அதன்பின் வழக்கு உயர்நீதிமன்றத்துக்கே வந்து என தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படம் வெளியாகவில்லை..
தற்போது ஜனநாயகன் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை படத்தின் தயாரிப்பாளர் வாபஸ் பெற்றதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பத்திருக்கிறார். ஆனல, படம் எப்போது மறுதணிக்கை செய்யப்படும் என்பது தெரியவில்லை. ஆனால்,இந்த மாதம் 19ம் தேதி அல்லது 20ம் தேதி படம் வெளியாகும் அல்லது அடுத்த வாரம் 27ம் தேதி வெளியாகும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது..
இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் கனடா விநியோக உரிமையை வாங்கி இருக்கிறோம் York Cinemas என்கிற நிறுவனம் ஏப்ரல் 30ம் தேதி வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை. எனவே முன்பதிவு செய்து அனைவரும் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பி வாங்கிக் கொள்ளுங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…