Cinema News
வியாபாரம்னு வரும் போது நீயும் குள்ளமணியும் ஒன்னுதான்.. ரஜினியின் முகத்துக்கெதிரா பேசிய பிரபலம்
தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருபவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ப்ரொடியூசர் ஹீரோ, டைரக்டர் ஹீரோ என்று ரஜினிகாந்தை குறிப்பிடலாம். ஏனெனில் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை படி கேட்டு நடப்பவர். தயாரிப்பாளர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் வரக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருப்பவர். இவருடைய பெரும்பான்மையான திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
இன்று அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக ரஜினி இருக்கிறார் என்றால் அதற்கு பின்னாடி அவருடைய கடின உழைப்பும் முயற்சியும் தான் காரணமாக இருந்தது. கர்நாடகாவில் இருந்து வந்து தமிழே பேசத் தெரியாத ரஜினிகாந்த் இன்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் தலைவனாக கருதப்படுகிறார். கமல் சீனியராக இருந்தாலும் சினிமாவே தன் உயிர் என நினைத்து வரும் கமலால் பிடிக்க முடியாத இடத்தை இப்போது ரஜினி அடைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: உங்கள ‘பொண்ணு’ கேட்டு வந்துருக்கோம்… வீட்டுக்கே சென்ற டாப் ஹீரோ
இந்த நிலையில் ரஜினிக்கும் தனக்குமான நட்பை பற்றி பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ரஜினியின் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படங்களை வாங்கி நல்ல முறையில் லாபம் பார்த்து வருபவர் தான் திருப்பூர் சுப்ரமணியன். இவருக்கும் ரஜினிக்கும் இடையே சொல்ல முடியாத ஒரு பிணைப்பு இருந்து வருகிறது. அது எப்படி எந்த நேரத்தில் ஆரம்பித்தது என்பதை பற்றி ஒரு பேட்டியில் திருப்பூர் சுப்ரமணியன் கூறி இருக்கிறார்.
ரஜினியை சந்தித்த முதல் சந்திப்பே சண்டையில் தான் ஆரம்பித்தது என கூறிய திருப்பூர் சுப்பிரமணியன் அந்த காலத்தில் ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியாகிறது என்றால் அவரின் அடுத்த படம் நான்கு வாரங்கள் கழித்து தான் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமாம். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியானால் தியேட்டரில் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்ற வகையில் இந்த மாதிரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றனர்.
அந்த கட்டத்தில் ரஜினியின் ஒரு படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் சரியாக இரண்டு வாரம் கழித்து தளபதி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையில் சம்பந்தப்பட்ட படக்குழு இருந்திருக்கிறார்கள். இது திருப்பூர் சுப்பிரமணியனுக்கு தெரிய வர உடனே ரஜினியையும் ஜீவியையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.
அது மட்டும் அல்ல தளபதி படத்தின் ப்ரொடியூசரிடம் நோ அப்ஜெக்ஷன் கடிதத்தையும் வாங்கி வரும்படியும் ரஜினியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். ரஜினியும் ஜீவியும் ஒரு மணி நேரத்தில் ப்ரொடியூசரிடம் கடிதம் வாங்கி வருகிறோம் எனக் கூறிவிட்டு அந்த கடிதத்தையும் வாங்கி கொடுத்து விட்டார்களாம்.
இதையும் படிங்க: அவருதானே ஹீரோ’… ஆத்தீ! வன்ம குடோனா இருப்பாரு போல!
அதன் பிறகு ஒரு நாள் திருப்பூர் சுப்பிரமணியனை ரஜினி அழைத்து தனியாக அவருடைய வீட்டில் பேசியிருக்கிறார். அப்போது திருப்பூர் சுப்பிரமணியனிடம் ரஜினி ‘நேற்றைய கூட்டத்தில் நீங்கள் என்னையையே அழைத்து இப்படித்தான் செய்ய வேண்டும் என சட்டம் போட்டீர்களே .எப்படி அந்த மாதிரி செய்தீர்கள்’ என கேட்டாராம்.
அதற்கு திருப்பூர் சுப்ரமணியன் ‘என்னை பொறுத்த வரைக்கும் வியாபாரம்னு வரும் பொழுது நீங்களும் குள்ளமணியும் ஒன்றுதான். சட்டம் என்று வந்துவிட்டால் உங்களுக்கும் குள்ளமணிக்கும் ஒரே சட்டம் தான் ’என கூறினாராம் திருப்பூர் சுப்பிரமணியன். இந்த ஒரு வார்த்தை ரஜினிக்கு மிகவும் பிடித்த போக இன்றிலிருந்து நாம் இருவரும் நண்பர்கள் என கூறினாராம் ரஜினி. அது இன்றுவரை தொடர்கிறது என சுப்பிரமணியன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்