Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட்டான போட்டியாளர்களை விட அதிகமாக நிகழ்ச்சியின் க்ரியேட்டிவ் டீம் தான் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் எக்ஸ் தளத்தில் விஜய் டிவியின் அட்மின் என்பது தான் ஆச்சரியமான தகவல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி கிட்டத்தட்ட் 4 வாரம் நெருங்கி விட்டது. எப்போதுமே சீசன் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்னொரு தபா அஜித் படம் பண்ணுவீங்களா!.. சிறுத்தை சிவா ரியாக்ஷன் தான் செம!.. ரொம்ப அடிவாங்கியிருப்பாரோ?..
அதனால் குறையை போக்கும் விதமாக ஒரே நேரத்தில் 5 பேர் உள்ளே அனுப்பபடுகிறார்கள். ஆனால் அவர்கள் கூட எந்த விதமான முன்னேற்றம் கொடுப்பார்கள் என்ற ஐடியாவே இல்லாமல் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வினுஷாவின் எலிமினேஷன் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யுகேந்திரனின் எலிமினேஷன் எதிர்பாராமல் நடந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் டிவி எக்ஸ் தளத்தின் அட்மின் காலையிலேயே பை எனப் போட்டு ஒரு மிக்சர் படத்தினை பதிவிட்டார். இது யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவியை குறிப்பதாக இருந்தது. இதனால் ரசிகர்களே அவர்களுடன் சண்டைக்கு போய்விட்டனர். உங்க போட்டியாளர்களை நீங்களே அசிங்கப்படுத்தலாமா?
இதையும் படிங்க: ஒரே நாளில் இத்தனை ஷாக்கா… இரண்டு அவுட்டு.. அஞ்சு எண்ட்ரி… ஆனா இது மட்டும் மாறாது போலயே..!
இன்னும் அக்ஷயா, விக்ரம், மணி எல்லாமே மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு தானே உள்ளே இருக்காங்க. அவர்களுக்கு போட வேண்டியது தானே. கடந்த வாரம் வெளியேறிய விஜய் வர்மா, அனன்யாவுக்கு எந்த போஸ்ட்டும் போடாத நிலையில் இவர்களுக்கு மட்டும் ஏன்?
போட்டியாளர்கள் ஜொலிக்காமல் போனதற்கு காரணம் பிக்பாஸ் க்ரியேட்டிவ் டீம் தான். அவர்கள் ஒரு டாஸ்க்கும் கொடுக்காமல் இருந்தால் அவர்களால் எப்படி விளையாட முடியும்? இப்படி பலரும் தொடர்ச்சியாக வசைப்பாடி தொங்க விட்டனர். இதையடுத்து அந்த போஸ்ட் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…