அந்த விஷயத்தில் ரஜினி மாதிரி பிடிவாதம் பிடிக்கவே முடியாது..!ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!

rajini
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதைவிட அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணை உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

rajini 3
ரஜினியின் சில திரைப்படங்கள் அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்ததற்கான வரலாறு உண்டு. அப்படிப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ”முத்து” திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக மீனா மற்றும் வடிவேலு,செந்தில் போன்றவர்களை கொண்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருப்பார். இப்படத்தின் படபிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் ஒன்றை கூறியிருக்கிறார் நடிகர் ரமேஷ் கண்ணா.

ramesh kanna
ரமேஷ் கண்ணா எழுத்தாளர்,கதாசிரியர்,இயக்குனர்,நகைச்சுவை நடிகர்,குணச்சித்திர நடிகர் போன்ற பன்முக திறன்களை கொண்டவர் ஆவார். முத்து திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டிருந்தார். அதன் கிளைமாக்ஸ் காட்சி மைசூரில் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. ரஜினி வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பாரே.. அந்த காட்சிதான் படமாக்க படம் வேண்டும். இதற்கு 7 மணிக்கு காட்சி எடுக்கப்பட வேண்டும் என்று இயக்குனர் விருப்பம் தெரிவித்தார்.

muthu movie
அதற்க்கு ரமேஷ் கண்ணா 7:00 மணிக்கு எல்லாம் ரஜினி சார் வர முடியுமா..? அவருக்கு வேற வேலை இருக்காதா..? அதெல்லாம் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். ஆனால் ரஜினி நான் ஏழு மணிக்கு கட்டாயம் வந்தே தீருவேன் என்று பிடிவாதமாய் நின்று இருக்கிறார். மறுநாள் காலை 6 மணிக்கு எல்லாம் பட குழு வந்து சேர்ந்து விட்டனர். ரமேஷ் கண்ணா ”ரஜினி சார் எல்லாம் எங்க வர போறாரு..” என்று பேசிக் கொண்டிருக்கையில் திடீரென்று பின்பக்கத்தில் இருந்து ரஜினி ”நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு கண்ணா..” என்று சொன்னதும் பதறிப் போய்விட்டார் ரமேஷ் கண்ணா.

rajini 2
படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்தில் வருவது தமிழ் சினிமாவில் ரஜினியை தவிர வேறு யாராலும் முடியாது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து போனாலும் இன்றளவும் சிகரம் தொட்டு நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க இதுவும் முக்கியமான பண்புகளில் ஒன்று என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ரமேஷ் கண்ணா.