கோடிகளில் புரளும் இளம் இயக்குனர்கள்!. லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா?!..

Published on: March 3, 2024
New Directors
---Advertisement---

இன்றைய தமிழ்சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி கோடிகளில் சம்பளம் வாங்கி முன்னணி இயக்குனர்களாக 5 பேர் உள்ளனர். அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

மகிழ்திருமேனி

துணிவு படத்தை எடுத்த இயக்குனர் மகிழ்திருமேனி அஜீத்தை வைத்து எடுத்து வரும் படம் விடாமுயற்சி. இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு முன்தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் ஆகிய தரமான படங்களை மகிழ்திருமேனி இயக்கி உள்ளார். இவரது சம்பளம் ரூ.5 கோடி.

நெல்சன் திலீப்குமார்

இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். தனக்கென தனிபாணியைக் கையாண்டு பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை எடுத்தார்.

இது 100 கோடி வசூலை ஈட்டியது. தொடர்ந்து தளபதி விஜயின் பீஸ்ட், சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் என டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி சாதனை படைத்தார். இப்போது ஒரு படத்துக்கு இவரது சம்பளம் ரூ.55 கோடி.

லோகேஷ் கனகராஜ்

logesh

இவர் சில படங்களே இயக்கினாலும் அத்தனையும் மெகா ஹிட் தான். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார். தற்போது புதிதாக எல்சியு என்ற கான்செப்ட் படி படங்களை இயக்கி வருகிறார். கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ படங்கள் வசூலில் சாதனை படைத்தவை. தற்போது ரஜினியுடன் இணைந்து அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்போது இவர் ஒரு படத்திற்கு 40 முதல் 45 கோடி சம்பளம் வாங்குகிறார்.

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். லவ்டுடே படத்தில் ஹீரோவாகவும் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் 7 முதல் 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

எச்.வினோத்

சதுரங்க வேட்டையின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தீரன் அதிகாரம் ஒன்று என்ற தரமான படத்தைக் கொடுத்தார். அதன்பின் அஜீத்தின் ஆஸ்தான இயக்குனரானார். துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களைக் கொடுத்தார். இப்போது இவரது சம்பளம் ரூ.10 கோடி.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.