இர்ஃபானின் நிலைமை இப்படியாச்சே… எல்லாத்துக்கும் அந்த சேட்டைதான் காரணமாம்…!

by sankaran v |   ( Updated:2025-04-30 22:16:24  )
இர்ஃபானின் நிலைமை இப்படியாச்சே… எல்லாத்துக்கும் அந்த சேட்டைதான் காரணமாம்…!
X

யூடியூபர் இர்ஃபான் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். வியூவர்ஸ்சுக்காக எதை எதையோ பண்றாரு. அப்புறம் வசமா சிக்குறார். மன்னிப்பு கேட்கிறார். இதே இவருக்கு வேலையாப் போச்சு என்று நெட்டிசன்கள் அவரை வெறுக்க ஆரம்பித்து புறக்கணித்து விட்டனர். ஆரம்பத்தில் அவரை ரசித்தவர்கள் இப்போது வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது குறித்து ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஆரம்பத்துல இர்ஃபான் ஒரு ஃபுட் டெலிவரி பாயா இருக்காரு. இந்த ஃபுட்டை சாப்பிட்டு நாம ஏன் வீடியோ போடக்கூடாதுன்னு பார்க்குறாரு. அதனால அப்படி பண்றாரு. அவரைப் பார்க்கும்போது குழந்தை மாதிரி கலகலன்னு பேசுற முகம். அவரோட உடல்வாகே வேற மாதிரி இருக்கும்.

முட்டையை எல்லாம் முழுசா முழுங்குவாரு. பேசிக்கிட்டே சிரிச்சிக்கிட்டே ஜாலியா போகும். இது பார்வையாளர்களைக் கவர ஆரம்பித்தது. எங்கெங்கேயோ போயி கடுமையா உழைச்சி வெற்றியை அடைஞ்சிட்டாரு. எல்லாருமே இர்ஃபானை நம்ம வீட்டுல ஒரு பையன்னு நினைச்சிக் கொண்டாட ஆரம்பிச்சாங்க. யூடியூப்ல இருந்து அவருக்கு நிறைய வருமானம் வர ஆரம்பிச்சது.

பல அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களோடு சேர்ந்து சாப்பிட்டும் வீடியோ போட்டாரு. அமெரிக்கா போய் நெப்போலியன் வீட்லயே தங்கி இருந்தாரு. நெப்போலியன் மகன் இர்ஃபானின் பெரிய ஃபேன். அங்க போட்ட வீடியோ அவரை மேலும் பிரபலமாக்கியது. இந்த மாதிரி சூழலில் அவருக்கு வியூவ்ஸ் போகலன்னா அது பெரிய விஷயமா மாறிடுச்சு. அதனால எல்லாத்தையுமே கன்டன்டா மாத்தறாரு. அது ஒரு வகையான அடிக்ஷனா மாறிடுது.

எந்த விஷயமா இருந்தாலும் அளவு கடந்து போனா அது மனநோய்தான். இர்ஃபானைப் பொருத்தவரை அவர் நியூஸ் அடிக்ஷன். துப்புரவுத்தொழிலாளி இறந்த விஷயத்தில் எது உண்மைன்னு தெரியாம நிலுவையில் நிக்குது. அது வழக்குல இருக்கு. கருவுல இருக்குறது ஆணா, பெண்ணான்னு சொல்லக்கூடாது. அதுதான் இந்திய சட்டம்.

ஆனா அதுலயும் தன்னோட வேலையைக் காட்டுறாரு இர்ஃபான். துபாய்ல போய் ஸ்கேன் பண்ணி அதோட ரிசல்டை வீடியோ எடுத்துப் போடுறாரு. அது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. தமிழ் ரசிகர்கள் தான் அவருக்கு அதிகம். இப்படி பல சேட்டைகளைச் செய்ததால் மக்கள் அவரை வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. வியூவ்ஸ் எல்லாம் குறைஞ்சிடுச்சு.

5லட்சம், 10 லட்சம்னு போனது 60 ஆயிரம்னு போக ஆரம்பிடுச்சு. எந்த நேரத்திலும் மக்களைக் குறைச்சி எடை போடக்கூடாது. அதனால அவங்க வியூவ்ஸ்ச குறைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப சப்ஸ்கிரைப் பண்ணதை அன்சப்ஸ்கிரைப் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. எப்பவும் பாப்புலரா இருக்குறதைத் தக்க வைக்கணும்னா கௌரவமா மாறணும். ரஜினிக்கு இன்று 75 வயசு. ஆனாலும் அவரைக் கொண்டாடக் காரணம் அவர் ஒரு எளிய மனிதர் என்பதுதான். என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story