தளபதியை சந்தித்த யுவன்... என்னவாக இருக்கும்? யூகிக்கும் ரசிகர்கள்...!
சினிமாவில் ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதேபோல் இசையமைப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர் என்றால் அது இளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான்.
இவரது தந்தை இளையராஜா 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தார். தற்போது வரை இவரது பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் ஓடி கொண்டுதான் உள்ளன. எவர்கிரீன் இளையாராஜா பாடல்கள் தான் எப்போதும் ரசிகர்களின் பேவரைட்.
தற்போது தந்தையின் இடத்தை யுவன் பிடித்து விட்டார். ஆம் யுவனின் இசைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. பலர் அவர்களின் தனிமையை கழிக்க இவரின் பாடல்கள் தான் உதவுகிறது. காதல் தோல்வி, நட்பு, காதல், பாசம் என அனைத்து வகையான பாடல்களும் யுவன் இசையில் மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளன.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தளபதி விஜயை நேரில் சந்தித்து பேசியுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை அவர் சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். நட்பு ரீதியாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் அந்த கண்ணப் பார்த்தாக்கா என்ற பாடலை யுவன் பாடியிருந்தார்.
ஆனால் ரசிகர்களோ யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த சந்திப்பு அதற்கான ஒரு ஆரம்பமாக இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.