எப்படிப்பா அந்த பழைய யுவனை மறுபடியும் தேடி பிடிச்சிங்க!.. நிவினை தொடர்ந்து கவினுக்கும் சூப்பர் சாங்!

Published on: February 16, 2024
---Advertisement---

இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்டார் படத்தின் ஸ்டார் தி மேக்கிங் எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு கவின் நடித்த டாடா படம் அவரை அடுத்த சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டது. விஜய் சினிமாவில் இருந்து விலகும் பட்சத்தில் சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், கவின் அடுத்த தலைமுறை நடிகராக சரியான படங்களை கொடுத்து ரசிகர்களை குறிப்பாக அதிகப்படியான ரசிகைகளை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் சீரியஸா பேசும் போது மட்டும் ஏன் சிரிப்பு வருது!.. ’அமரன்’ அமர்க்களப்படுத்துமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் எஸ்கேப்பான கவின் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே ஸ்டார் இன் தி மேக்கிங்காகவே உருமாறி வருகிறார்.

”கனவே என் இரவைக் கேட்டாய்.. அழகாய் நீ உறங்கவே.. கனவே என் உறவைக் கேட்டாய் தனிமை உனக்கேது?.. கனவே என் காதல் கேட்டாய்.. மலராய் நீ பூக்கவே! கனவே என் சாதல் கேட்டாய்.. இறப்போ உனக்கேது?.. ஒரு நாள் நான் வாழ்வேன் ஒரு நாள் வெல்வேன்! நதி எங்கு போகும் நான் வருவேன்” என்கிற அருமையான வரிகளுடன் இந்த பாடல் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பிரீத்தா ஜிந்தாவ விட நீ க்யூட்டு!.. ரீல்ஸ் வீடியோ போட்டு சூடேத்தும் கேப்ரியல்லா…

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஏழு கடல் ஏழு மலை படத்தின் மறுபடி நீ பாடலில் இருந்தே இன்னும் வெளிவராத ரசிகர்கள் மீண்டும் அந்த பழைய யுவனை எங்கே இருந்து கொண்டு வந்தீங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.