’விசில் போடு’ சொதப்பலுக்கு விஜய்தான் காரணமாம்!.. அடுத்த பாட்டுல வெயிட்டான விஷயத்தை இறக்கும் யுவன்!

Published on: June 14, 2024
---Advertisement---

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஜய் நடித்த புதிய கீதை படத்துக்கு கடைசியாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் சுமாரான ரகத்திலேயே இருந்த நிலையில் அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து நடிகர் விஜய் பணியாற்றவில்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டதும் முதல் கோரிக்கையாக இந்த படத்தில் தனது சகோதரர் யுவன் சங்கர் ராஜா பணியாற்ற வேண்டும் என வெங்கட் பிரபு கேட்டுக் கொண்டார் என்றும் அதற்கு விஜய் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்… பயந்து நடுங்கிய திரையுலகம்… நடந்தது இதுதான்..!

சமீப காலமாகவே விஜய் படங்களின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானால் அந்த வருடத்தில் அந்த பாடல்தான் மிகப்பெரிய ஹிட் பாடலாக இருக்கும். வாத்தி கம்மிங், அரபிக் குத்து, ரஞ்சிதமே, நான் ரெடிதான் என சமீப காலமாக பல பாடல்கள் ஹிட் அடித்து வந்தன. ஆனால், இந்த ஆண்டு வெளியான கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு பாடல் ரசிகர்களை பெருமளவில் கவரவில்லை.

யுவன் சங்கர் ராஜா முதலில் நான்கு டியூன்கள் போட்டு நடிகர் விஜய்க்கு அனுப்பியதாகவும், அதில் நடிகர் விஜய் தான் இந்த ட்யூனை தேர்வு செய்தார் என்றும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே அந்த பாடல் சரியாக போகாத நிலையில் நடிகர் விஜய் கம்முனு இருந்துவிட்டார் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இது என் படமே இல்ல!.. நான் சொன்ன எதையுமே செய்யல!.. எம்.ஜி.ஆர் சொன்ன ஹிட் படம் இதுதான்!..

ஆனால், யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்படியாவது சூப்பர் ஹிட் பாடலை தளபதி விஜய்க்கு போட்டு விட வேண்டும் என்கிற வெறி இருப்பதால், மறைந்த தனது தங்கை பவதாரிணியின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி கோட் படத்தில் அருமையான மெலோடி பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பாடல் வெளியானால் நிச்சயம் விஜய் ரசிகர்கள் எப்போதுமே கொண்டாடும் எவர்கிரீன் பாடலாக மாறும் என்றும் கூறுகின்றனர்.

கோட் படத்தில் ஏஐ மூலமாக வெங்கட் பிரபு ஒரு பக்கம் ஏகப்பட்ட விஷயங்களை க்ரியேட் செய்து வரும் நிலையில், தனது பங்குக்கு யுவன் சங்கர் ராஜாவும் ஏஐ மூலம் விளையாட போகிறார் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அந்தப் படத்தால் ஃபீல் பண்ணி அழுத சூர்யா! எப்படி மீண்டு வந்தார் தெரியுமா? பிரபலம் சொன்ன தகவல்

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.