என்னய்யா மூஞ்சில எந்த ரியாக்ஸனும் இல்லையே.! இதுதான் யுவன் ஸ்டூடியோவில் நிலைமை.!

by Manikandan |
என்னய்யா மூஞ்சில எந்த ரியாக்ஸனும் இல்லையே.! இதுதான் யுவன் ஸ்டூடியோவில் நிலைமை.!
X

சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலாக வீடியோ என்றால் அது பீஸ்ட் முதல் பாடலான அரபிக் குத்து ப்ரோமோ வீடியோ தான். ப்ரோமோ வீடியோ மட்டுமே 6 நிமிடங்கள் ஓடியது.

ஆனால், அந்த 6 நிமிடம் எப்படி முடிந்தது என்றே தெரியாத அளவிற்கு நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் அந்த விடியோவை கலகலப்பாக மாற்றியிருப்பர். இதே போல தான் டாக்டர் முதல் பாடலுக்கும் இந்த மூன்று பேரும் ப்ரோமோ வீடியோ விட்டுருப்பர்.

அந்த வீடியோ பற்றி இயக்குனர் அமீரிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர் அந்த வீடியோ மிகவும் பிடித்திருந்தது. மூவரும் கலகலப்பாக பேசியிருப்பர்.

இதையும் படியுங்களேன் - வாணி போஜனை எதுக்குங்க தூக்குனீங்க.!? ரசிகர்கள் குமுறல்.! இயக்குனரின் அதிரடி பதில்.!

அப்போது நீங்கள் யுவன் ஸ்டூடியோவில் பாடல் வாங்குவதை ஒரு விடியோவாக போடலாமே என கேட்ட்டபோது, அது சரியாக வராது. நாங்க அதிகமா பேசிக்கமாட்டோம். ஜி இதான் சூழ்நிலை, இதுக்கு பட்டு வேணும் அப்டினு கேப்பேன். உடனே அவர் ஏதேதோ வாசிப்பார்.

அதற்கு முகத்தில் எந்த ரியாக்சனும் இருக்காது. எதோ ஒரு டியூன் பிடித்துப்போகும் உடனே அதனை ஓகே செய்து விடுவோம். அதனை விடியோவாக எடுத்தால் என்ன இருவர் முகத்திலும் ஒரு ரியாக்சனும் இல்லை என பார்ப்பவர்கள் கூறிவிடுவார்.

Next Story