அண்ணாவைப் பார்க்க முடியாமல் தலைகுனிந்த எஸ்எஸ்ஆர்..! சிவாஜியே வியந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?

by sankaran v |
Anna, SSR
X

Anna, SSR

லட்சிய நடிகர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்எஸ்.ராஜேந்திரன். இவருக்கும், அண்ணாவுக்குமான தொடர்பைப் பற்றி ஒரு சுவாரசியமான சம்பவத்துடன் நினைவு கூர்கிறார் பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லெட்சுமணன். என்னவென்று பார்க்கலாமா...

உலக அரசியலில் ஒரு நடிகராக இருந்து கொண்டு பொதுத்தேர்தலில் பங்குபெற்று அதில் வெற்றியைப் பெற்ற முதல் நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரன். அரசியல், சினிமா என இரண்டிலும் தனது வேலையைத் திறம்படச் செய்தவர்.

அண்ணா மீது மிகுந்த பாசம் கொண்டவர். திராவிட இயக்கத்தின் கொள்கை மேல் அதீத ஈடுபாடு உடையவர். அந்தக் கொள்கைகளைக் காப்பாற்றுவதற்காக தனது சொந்த வாழ்க்கையில் அவர் இழந்த இழப்புகள் ஏராளம்.

அரசியலில் மட்டுமின்றி சினிமாவிலும் நீண்டகாலம் இருந்தார். தான் சிறந்த நடிகனாக இருக்கலாம். ஆனால் தமிழ் வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் மிக அழகாக உச்சரிப்பதில் எஸ்எஸ்.ராஜேந்திரனோடு என்னால் போட்டி போட முடியாது என்று சிவாஜியே சொன்னாராம்.

அண்ணாவின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிப்பாராம் எஸ்எஸ்ஆர். அவர் எழுதிய பல கருத்துக்கள் எஸ்எஸ்ஆரை ஈர்த்ததாம். அதனால் அண்ணாவை எப்படியாவது தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்துவிட நினைத்தாராம்.

டி.கே.சண்முகம் தனது நாடகங்களில் ஒன்றான சந்திரோதயம் நாடகத்தை நடத்த ஈரோடு வருகிறார் அண்ணா என்ற செய்தி பரவியது. இதை அறிந்த எஸ்எஸ்ஆர் மகிழ்ந்தார். அந்த நாடகத்தில் அண்ணாவும் நடிக்கிறார் என்பது அவருக்குத் தெரியுமாம்.

SSR, Sivaji

SSR, Sivaji

எஸ்எஸ்ஆருக்கும் அந்த நாடகக்குழுவில் ஒப்பனை போடும் வேலை வந்தது. அவர் இந்த மேக்கப்பை சீக்கிரம் முடித்துவிட்டால் அண்ணாவை சீக்கிரம் பார்த்துவிடலாமே என்று நினைத்தார். ஆனால் மேக்கப் போட வந்தவரோ அந்தப் பக்கம், இந்தப்பக்கம் என முகத்தைத் திருப்பிக் கொண்டே இருந்தாராம். உடனே அப்படி இப்படி ஆட்டாம, தலையை ஒரே மாதிரி வைங்க என கண்டிப்புடன் சொன்னாராம் எஸ்எஸ்ஆர்.

அப்போது பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தார். அவரது கம்பீரமான தோற்றம் கண்டு, இவர் தான் அண்ணா என நினைத்தார். அப்போது தன்னிடம் மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தவரிடம், அவரு தான் அண்ணாவா என கேட்க, அவரும் பதிலே சொல்லாமல் லேசாக சிரித்தாராம்.

நான் தான் அண்ணா என அவர் சொன்னதும், எஸ்எஸ்ஆருக்கு, கையும் ஓடலை. காலும் ஓடலையாம். யாரைப் பார்க்கணும்னு துடியா துடிச்சாரோ, யாரைத் தன் மனதில் தினமும் வைத்துப் போற்றினாரோ அவர் தான் அண்ணா என தெரிந்ததும், நாம் போய் இவரை அங்கத் திரும்பு, இங்கத் திரும்புன்னு படாத பாடு படுத்தி விட்டோமே என தலைகுனிந்தாராம்.

இதையும் படிங்க... இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினிகாந்த்!… அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

அப்போது அவரது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க துணிச்சல் இல்லாமல் தான் அப்படி தலைகுனிந்தாராம் எஸ்எஸ்ஆர். இதை அண்ணா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்றாலும், பின்னர் நாடகம் முடிந்ததும் இதை நண்பர்களுடன் காமெடியாகப் பேசினாராம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story