எதிர்நீச்சல்: துணிச்சலாக பேசிய ஈஸ்வரி…கதிகலங்கிய கதிர்… சமாதானபடுத்திய கரிகாலன்…
Ethirneechal Serial: நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியை அடுத்தவளின் புருஷனை ஆட்டையபோட பாகுறியா என கதிர் சொல்ல கோமடைந்த ஈஸ்வரி கதிரை ஓங்கி அறைகிறாள். பின் அங்கிருந்த ஈஸ்வரியின் மாமியார் ஈஸ்வரியிடம் கோபப்படுகிறார். அதற்கு ஈஸ்வரி அம்மா வயதில் இருக்கும் என்னை இப்படி அசிங்கமா உங்க பையன் பேசுறான்…அதை கேட்காம அவனுக்கு சப்போர்ட்டா வந்து பேசுறீங்க என மாமியாரிடம் கோபமடைகிறாள்.
பின் கதிரிடம் என்னுடைய குணநலத்தை பற்றி நீ பேச உனக்கு தகுதி கிடையாது என கதிரிடம் கூறுகிறாள். அந்த நேரத்தில் ஜனனி அனைவரின் முன்னிலையிலும் கதிரை பார்த்து அண்ணன் சொத்துக்கு ஆசைபட்டு கதிர்தான் குணசேகரனை கொன்றுவிட்டார் என கூறுகிறாள்.
இதையும் படிங்க:மார்க் ஆண்டனி ஹிட் அடிச்சும் அது நடக்கலயே!.. புலம்பும் விஷால்!. ஐயோ பாவம்!..
அதற்கு ஜனனியின் மாமியார் கோபபட்டு கதிர் அப்படிபட்டவன் இல்லை. வீணா அவன் மேல் பழி போடாதே என ஜனனியை கண்டிக்கிறாள். மேலும் சக்தியிடம் ஜனனியை அமைதியாக இருக்க சொல் என கூறுகிறார். சக்தியோ வழக்கம்போல் அமைதியாக இருக்கிறார். ஜனனியோ கண்டிப்பாக அதுதான் உண்மை…குணசேகரனை கொன்றுவிட்டு அவரின் செருப்பு கிடைத்தது என கதிர் நாடகம் ஆடுகிறார் என கூறுகிறாள். கதிரோ இது அனைத்தையும் கேட்டு கல்லாக கண் கலங்கி நிற்கிறான்.
பின் ஞானமோ கதிரை சந்தேக பார்வையுடன் பார்க்கிறார். பின் அங்கிருந்து அனைவரும் செல்ல கதிர் அன்று இரவு நன்றாக குடித்துவிட்டு ஈஸ்வரி அடித்ததையே நினைத்து கோபமடைகிறார். பின் அங்கு கரிகாலன் வந்து கவலைபடாதே மாமா…இப்படிலாம் குடிக்காதே…நல்லதுக்கு இல்லை என கண்டிகிறான்.
இதையும் படிங்க:சொதப்பி வரும் ஜெயம் ரவி!.. கடைசியா சோலோவா ஹிட்டு கொடுத்து எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா?..
கதிரோ அண்ணன்னா எனக்கு உயிர். என்னை போய் இப்படி பழி போடுகிறார்களே என கூறி வருத்தபடுகிறார். கரிகாலனோ நீங்க மாமாவோட செருப்பை கொண்டு வந்ததால அனைவரும் பயந்து போய் இப்படியெல்லாம் பேசுறாங்க… நீங்க வருத்த படாதீங்க என ஆறுதல் கூற கதிரும் பழையபடி சிரிக்கிறார்.
பின் இருவரும் கீழே செல்ல அங்கு ஞானம் கதிரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். கதிரின் அம்மா அங்கு வர கதிர் குடிபோதையில் அவரின் அம்மாவின் காலில் விழுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
இதையும் படிங்க:உதவி செய்த எம்.ஜிஆரை தட்டி உதறிய வி.எஸ்.ராகவன்… ஆனாலும் மனுஷனுக்கு இம்புட்டு ஆகாதுப்பா!…