Connect with us
v.s.raghavan

Cinema News

உதவி செய்த எம்.ஜிஆரை தட்டி உதறிய வி.எஸ்.ராகவன்… ஆனாலும் மனுஷனுக்கு இம்புட்டு ஆகாதுப்பா!…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் வி.எஸ்.ராகவன். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இவர் தனது நடிப்பின் மூலம் பல்வேறு ரசிகர்களையும் சம்பாதித்தார்.

வைர மாளிகை திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர் பல்வேறு வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். பின் சிவகாமியின் செல்வன், உரிமைகுரல், இரு துருவம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த கால திரைப்படங்களான தமிழ்படம், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க:இது அக்டோபர் மாசமா இல்லை அப்டேட் மாசமா?.. இப்படி மூணு சிங்கம் ஒண்ணா களமிறங்குதே!..

இவர் எம்.ஜிஆருக்கு நெருக்கமானவர். ஒளி விளக்கு எனும் திரைப்படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். பின் உரிமை குரல், எங்கள் தங்கம் போன்ற பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்தார். இவர்களின் நட்பு பல காலங்கள் வரை நீடித்தும் இருந்தது.

பொதுவாக எம்.ஜி.ஆர் உடன் நடிக்க ஏராளமான நடிகர்கள் போட்டி போடுவது உண்டு. மக்கள் திலகம் படத்தில் நடிப்பவர்களுக்கு சம்பளம் சற்று அதிகமாகவும் அதே நேரம் உரிய நேரத்தில் சம்பளம் வரும் என்பதற்காகவும் பல நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டுவர்.

இதையும் படிங்க:பெரிய அளவில் பேசப்பட்ட கேரக்டர்! விருப்பமே இல்லாமல் இருந்த விவேக்கை வற்புறுத்தி நடிக்க வைத்த ஹீரோ

எம்.ஜி.ஆர் முதல்வரானபின் வி.எஸ்.ராகவனை இயல் இசை நாடக மன்ற கெளரவ தலைவராக எம்.ஜி.ஆர் நியமித்தார். அப்போது ஒரு முறை வி.எஸ்.ராகவனின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவருக்கு பண உதவி தேவைப்பட்டது. அதனை அறிந்த எம்.ஜி.ஆர் தனது உதவியாளரிடம் பணத்தினை கொடுத்து அதனை ராகவனிடம் கொடுக்குமாறு கூறுகிறார்.

உதவியாளரும் ராகவனின் வீட்டிற்கு சென்று பணத்தினை கொடுக்க வி.எஸ்.ராகவனோ அதனை எம்.ஜி.ஆரிடமே திரும்ப கொடுத்துவிடும்படி கூறுகிறார். இதனை அறிந்த எம்.ஜி.ஆர் மிகவும் வேதனை அடைகிறார். தனது உதவியை நிராகரித்துவிட்டாரே என வருத்தப்பட்டு ராகவனிடம் கேட்கிறார். அதற்கு ராகவனோ எனக்கு பணம் கிடைத்துவிட்டது. ஆதனால் இப்போது இந்த பணம் வேண்டாம். இப்பணத்தினை உதவி தேவைபடும் வேறு யாருக்காவது தெவைப்படும். மேலும் எனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் என எம்.ஜி.ஆரிடம் கூறுகிறார். அதனை எம்.ஜி.ஆரும் புரிந்து கொண்டார் மற்றும் இவரின் நேர்மையை பாராட்டினார். இவ்வாறான இவர்களது நட்பு பல ஆண்டுகள் நீடித்தது.

இதையும் படிங்க:தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..

google news
Continue Reading

More in Cinema News

To Top