எம்ஜிஆர், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்ட நடிகைகள்.... கேட்ச் செய்த கவுண்டமணி...!
சில நடிகர்களுடன் சில நடிகைகள் நடித்திருக்க மாட்டார்கள். குறிப்பாக கமலுடன் நதியா, ரகுவரன் ஆகியோர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. எம்ஜிஆருடன் ரஜினி நடிக்கவில்லை. அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் இணைந்து நடிக்காத நடிகைகளும் பலர் உள்ளனர்.
நவரத்தினம் வேடத்தில் ஸ்ரீபிரியா வேடத்தில் முதலில் கேட்கப்பட்டது நடிகை சுஜாதாவிடம் தான். அதைப் போல ஜெயா வேடத்தில் சுமித்ராவும், பி.ஆர்.வரலட்சுமி வேடத்தில் பிரமிளாவும் நடிக்க கேட்கப்பட்டது. அவர்கள் மூவருமே அந்த சமயத்தில் படுபிசி.
அதனால் கால்ஷீட் பிரச்சனையால் கொடுக்க முடியவில்லை. எம்ஜிஆர் முதல்வரானதும் படம் நடிக்கவில்லை. இந்த நேரத்தில் இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் அப்போதே அந்த ஒரு படத்திலாவது எம்ஜிஆருடன் இணைந்து நடித்திருக்கலாமே என வருத்தப்பட்டுள்ளனர் அந்த நடிகைகள். நடிகர் கமல், ஸ்ரீதேவிக்கு எல்லாம் சிறுவயதிலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது.
40வருடங்களாக ரஜினியுடன் நடிக்காத நடிகையும் உள்ளார். அவர் யார் தெரியுமா? ஊர்வசி தான். நடிப்பில் ராட்சசி என்று போற்றப்படும் இவர் ஒருமுறை கூட ரஜினியுடன் நடிக்காதது ஏன் என்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இவரது முதல் படம் சர்வர் சுந்தரம். அதன் பின்பு தேனும் பாலும். ராமன் எத்தனை ராமனடி படங்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த உழைக்கும் கரங்கள் படத்தில் கவுண்டமணி நடித்துள்ளார் என்றால் நம்புவீர்களா? உண்மை தான். அவர் எப்போது வருவார் என்றால் கூட்டத்தில் ஒருவராக வருகிறார். அதனால் தான் நம்மால் அவரை அடையாளம் காண முடியவில்லை.
எம்ஜிஆர் முதலமைச்சராக வருவதற்கு முன்பு நடிக்க இருந்த படம் தான் நல்லதை நாடு கேட்கும். எம்ஜிஆர் முதல் அமைச்சரானதால இந்தப்படத்தை டிராப் பண்ணிட்டாங்க. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜேபிஆர் இந்தப்படத்தை எடுத்தார்.
எம்ஜிஆர் நடித்த ஒருசில காட்சிகளைத் தன்னோட படத்தில் சேர்த்து நல்லதை நாடு கேட்கும் என்ற பெயரில் வெளியிட்டார் ஜேபிஆர். இந்தப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவருமே நடித்துள்ளனர். இந்தப்படம் அவ்வளவாக ஓடவில்லை. படத்தில் சிறிது நேரம் மட்டுமே எம்ஜிஆர் வருகிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படம் எடுபடவில்லை.
அதே போல் பாக்யராஜ் நடித்த அவசர போலீஸ் 100 படத்திலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாதியில் நடித்து விட்ட அண்ணா நீ என் தெய்வம் படத்தில் நடித்த காட்சியை லாவகமாக இணைத்து இருப்பார். இருவரும் இணைந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இந்தக்காட்சியில் நடிப்பதைப் போல ஒட்ட வைத்து சமாளித்திருப்பார் கே.பாக்யராஜ்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அண்ணா நீ என் தெய்வம் படமானது 1977ல் சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் எடுக்கப்பட்டது. இந்தப்படத்தில் நம்பியாரும் நடித்துள்ளார். 80ல் வெளியானது அவசர போலீஸ் 100 படம். பாக்யராஜ், கவுதமி, சில்க் ஸ்மிதா, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அதே நேரம் கவுண்டமணி 1968ல் வெளியான நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஜெய்சங்கருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ கவுண்டமணி ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமாவுக்கு வந்துள்ளார் என்பது தெரிகிறது.