கல்லூரி நாட்களில் கலக்கிய வெற்றிப்பட இயக்குனர் இவர் தான்..!
வெற்றிப்பட இயக்குனரின் வெற்றிப்படங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்கிய படங்கள் என்றாலே வெற்றி தான். அஜீத்குமார், விஜயகாந்த், சூர்யா, சிரஞ்சீவி ஆகிய நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய கஜினி படம் மாபெரும் ஹிட் ஆனது.
படம் தயாரித்துள்ளார். திரைக்கதை எழுதி உள்ளார். இவருக்கு கள்ளக்குறிச்சி தான் சொந்த ஊர். 1987-90 வரை திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரியில் தான் பி.ஏ. முடித்தார். கல்லூரி நாட்களில் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது சினிமாவிற்குச் செல்வார். கல்லூரி நாள்களில் இவர் ஆர்வமுடன் கலை நிகழ்ச்சிகள் அதிலும் முக்கியமாக மிமிக் ஷோக்களில் கலந்து கொண்டு கிருபானந்த வாரியரைப் போல் பேசிக்காட்டி அசத்தியுள்ளார்.
எளிமையான மாணவனாகவும் அதே நேரம் பல்வேறு திறமைகள் வாய்ந்தவனாகவும் இருந்தார். கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கலாச்சார போட்டிகளில் இவரது பங்களிப்பைக் கண்டு அனைத்துத் தரப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் அடிக்கடி பாராட்டுவர்.
இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய ரமணா படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தான் அஜீத்குமாரிடம் இயக்குனர் முருகதாஸ_க்காக சிபாரிசு செய்தார். அப்படி வந்தது தான் தல அஜீத் நடித்த தீனா.
இதன் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு அடுத்தடுத்து படங்கள் வர ஆரம்பித்தன. ரமணா, கஜினி, ஸ்டாலின் ஆகிய படங்கள் வந்தன. அவரது 5வது படம் கஜினி. இதன் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்தார்.
சர்கார், தர்பார், ஸ்பைடர், அகிரா, கத்தி, மாலை நேரத்து மழைத்துளி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, ஹாலிடே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
ரங்கூன், அகிரா, பத்து எண்றதுக்குள்ள, ராஜா ராணி, வத்திக்குச்சி, எங்கேயும், எப்போதும் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். நோட்டா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் 25.9.1977ல் பிறந்தார். சிறுவயதிலேயே நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். இவரது நண்பர்களின் ஊக்கம் காரணமாகவே எழுத்தாளரானார். அதனால் எழுத்தாளர் கலைமணியிடம் இருந்து தனது தொழிலை ஆரம்பித்தார்.
தொடர்ந்து பூச்சூடவா என்ற படத்தில் நடித்தார். எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் தாகூர் படத்தில் சிரஞ்சீவி நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். துப்பாக்கி திரைப்படத்தின் ரீமேக் தான் இந்தியில் வெளியான ஹாலிடே. அகிரா என்பது மௌனகுரு படத்தின் மறு ஆக்கம்.
இன்று பிறந்தநாள் காணும் முருகதா
ஸ_க்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.