குட்பேட் அக்லி சர்ச்சை: இளையராஜா 50 கோடி கேட்டுருக்கணும்… இசைத்திருடர்கள்தான் இவங்க…! சீறும் பிரபலம்

ilaiyaraja gbu ajith
இளையராஜாவோட காபிரைட் வழக்கு ரொம்ப காலமாகவே போய்க்கிட்டு இருக்கு. மஞ்சுமெல் பாய்ஸ்சைத் தொடர்ந்து கூலி, குட்பேட்அக்லின்னு போய்க்கிட்டு இருக்கு. இதுல இளையராஜா கேட்குறது சரிதானா என்ற கேள்விக்கு பிரபல வழக்கறிஞர் சவீதா முனுசாமி வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியன் காபிரைட் 1957ன் படி ஒரு திரைப்படத்தில் பாடலை எடுத்துக் கொண்டால், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், சவுண்டு மிக்ஸ் பண்றவங்க இவங்க 3 பேருக்கும்தான் காபி ரைட்ல ராயல்டி கொடுக்கணும். அந்தப் பாடலை இசை அமைத்தவர் யாராவது இறந்து விட்டார் என்றாலோ அவங்க தலைமுறைக்கு 60 ஆண்டுகள் வரைக்கும் இந்தக் காபிரைட் உண்டுன்னு சட்டம் சொல்லுது.

Advocate savitha
காபிரைட்டுக்கான உரிமத்தைக் கோரும்போது பொதுஜனங்க இங்க தான் கிண்டல் பண்றாங்க. அப்படின்னா சட்டம் பற்றிய விழிப்புணர்வே இல்லை. பாட்டைக் கேட்டா கேஸ் போட மாட்டேன். அதை வணிகமா பண்ணும்போதுதான் காபிரைட் கேஸ் போடுவேன்னு இளையராஜா சொல்றாரு. மஞ்சுமெல் பாய்ஸ்ல இளையராஜா பாடல் தான். அது இல்லாம படமே கிடையாது.
அதே மாதிரி குட் பேட் அக்லி படத்துல இளையராஜாவோட 3 பாடலை முழுமையா பயன்படுத்திருக்காங்க. இது அறிவுசார் திருட்டு. இசைன்னு ஒரு பேரைப் போடுறாங்க. ஆனா வேறொரு இசையைத் திருடியிருக்காங்க. அவரு உட்கார்ந்து கஷ்டப்பட்டு இசை அமைப்பாராம். இவங்க அந்தப் பாட்டை எல்லாம் போட்டு படத்தை ஓட வைப்பாங்களாம். பேரை இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்னு போட்டுக்குவாங்க.

அப்படின்னா இவங்க எல்லாம் இசைத் திருடர்கள். உலக அரங்கில் போய் தமிழனின் பெருமையை சிம்பொனியை அரங்கேற்றி நிலைநாட்டி வர்றாரு. ஆனா இங்க சாதீயக் கண்ணோட்டத்துல தான் பார்க்குறாங்க. இளையராஜா எவ்ளோ ஹார்டு ஒர்க் பண்ணிருக்காரு. அந்தப் பாடலை கண்ட இடத்துல எல்லாம் போடுறாங்க. குட் பேட் அக்லி படத்துக்கு 100 கோடி வசூல்னு பெருமையா சொல்றாங்க.
அதுல இருந்து ஒரு 5 கோடி கொடுக்குறதுல என்ன தப்பு? என்னையக் கேட்டா இளையராஜா 5 கோடி கேட்டுருக்கக்கூடாது. 50 கோடி கேட்டுருக்கணும். அப்பதான் கொழுப்பு அடங்கும். படத்துல கதையே இல்லை. சரக்கே இல்லையே. பாட்டை ஃபுல்லா போட்டு படத்தை ஓட வச்சிருக்காங்க. அதனால 5 கோடி கேட்டுருக்காரு. இது அதிகம்னு சொன்னா அப்பதான் பயம் வரும். இனி திருட மாட்டாங்க என்கிறார் அட்வகேட் சவீதா.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரை பிரபல யூடியூப் சானலில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்தான். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் வரும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து வரும் கருத்துகளுக்கு எங்களது தளம் பொறுப்பேற்காது.