கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூப்பர்ஹிட் அடித்த சூர்யா - கார்த்தி படங்கள்
தமிழ்த்திரையுலகில் ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளர் அதிக படங்களைத் தயாரித்துள்ளார். அப்படி தயாரித்தால் படம் ஹிட்டாகுமா? இல்லையா என்று பார்க்கலாம். இங்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடிகர் சூர்யாவுக்கு நிறைய படங்களைத் தயாரித்துள்ளார்.
அதேபோல் தம்பி கார்த்திக்கிற்கு 7 படங்களைத் தயாரித்து அசத்தியுள்ளார் ஞானவேல் ராஜா. பருத்தி வீரன், சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் என்ற 7 படங்களும் நடிகர் கார்த்தி நடித்தது. பருத்தி வீரன், சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன் படங்கள் சூப்பர் ஹிட். இப்போது சூர்யா நடிப்பில் வெளியான சில படங்களைப் பார்ப்போம்.
பருத்தி வீரன்
இந்தப்படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். படம் அவ்ளோ சூப்பரா இருக்கும். பருத்திவீரனாக வரும் கார்த்தியும், சித்தப்பு செவ்வாழையாக வரும் சரவணனும் பண்ணும் அதகத்திற்கு அளவே இல்லை. கிராமத்து மண்வாசனையுடன் வரும் குத்தாட்டப்பாடல்கள் நம்மையும் ஆட்டம் போட வைக்கும் ரகம்.
அதிலும் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நாக்கைத் துருத்தியபடி ஆடும் கார்த்தியை ரசித்துக்கொண்டே இருக்கலாம். பிரியாமணியும் நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார். 2007ல் அமீரின் இயக்கத்தில் வெளியானது. யுவன் சங்கர்ராஜாவின் இசையில் அறியாத வயசு தெரியாத மனசு, ஊரோரம் புளியமரம், ஐயயோ என் உசுருக்குள்ளே உள்பட பல
சில்லுன்னு ஒரு காதல்
2006ல் என்.கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம். ஜோடியாக நடித்தவர் ஜோதிகா. பூமிகா, ஷ்ரேயா ஷர்மா, சுகன்யா, வடிவேலு. தம்பி ராமையா, சந்தானம், அல்வா வாசு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அட்டகாசம். கும்மி அடி, மச்சக்காரன், நியூ யார்க், ஜில்லென்று ஒரு காதல், முன்பே வா ஆகிய பாடல்கள் உள்ளன.
சிங்கம்
2010ல் ஹரி இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படம். சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக், ஆதித்யா, விஜயகுமார், நிழல்கள் ரவி, ராதாரவி, நாசர், யுவராணி, மனோரமா, மனோபாலா, பாண்டு, பெசன்ட் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் மெகா ஹிட். நானே இந்திரன், என் இதயம், சிங்கம், காதல் வந்தாலே ஆகிய பாடல்கள் உள்ளன.
கொம்பன்
2015ல் வெளியான கொம்பன் படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டானது. எம்.முத்தையாவின் இயக்கம் கிராமியமணத்துடன் சேர்ந்து நவரசங்களையும் தந்தது. லட்சுமி மேனன் கதாநாயகி. மாமாவாக ராஜ்கிரண் அசத்தல் நடிப்பு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பின்னி எடுத்திருக்கிறார். கம்பிகரை வேட்டி, அப்பப்பா, கருப்பு நிறத்தழகி, மெல்ல வளஞ்சது ஆகிய பாடல்கள் சூப்பர்.
தானா சேர்ந்த கூட்டம்
2018ல் விக்னேஷ் சிவன் இயக்கிய படம். சூர்யா, கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், செந்தில், சத்யன், நந்தா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். நானா தானா, சொடக்கு, பீலா பீலா, தானா சேர்ந்த கூட்டம், எங்கே என்று போவது ஆகிய பாடல்கள் உள்ளன.
மாஸ் என்கிற மாசிலாமணி
2015ல் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியான படம். சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன், கருணாஸ், ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தெறிக்குது மாஸ், நான் அவள் இல்லை, பூச்சாண்டி, பிறவி ஆகிய பாடல்கள் உள்ளன.