ஜெயிலர் 2 படத்தில் ரஜினி வலுவான கதையைப் பிடித்தது எப்படி? பிரபலம் தகவல்

by sankaran v |   ( Updated:2025-05-04 01:55:13  )
jailer 2
X

jailer 2

Jailer 2: ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா…

கதை கரெக்டா இருந்தா மட்டும்தான் படம் வெற்றி ஆகும். ஜெய்லர் 2 கதையில கதாசிரியராக ரஜினி இருந்து வேலை பார்க்குறதா கேள்விப்பட்டேன். படத்துல ஜெயிலரா வர்ற டைகர் முத்துவேல்பாண்டியனோட பிளாஷ்பேக் கதைதான் மெய்னா வருது. ஜெய்லர் 2ல வலுவான கன்டன்டை ரஜினி பிடிச்சிட்டாரு என்கிறார் செய்யாறு பாலு.

சசிக்குமார் ரஜினியைப் பற்றிப் பற்றி பேசும்போது ரொம்பவே ஆச்சரியப்பட்டுள்ளார். பேட்ட படத்தின் போது பல தகவல்களை சொல்லி இருக்கிறார் ரஜினி. சசிக்குமாருக்கே சுந்தரபாண்டியன்ல அப்படி நடிச்சிருக்கலாம். சுப்பிரமணியபுரத்துல இப்படி எடுத்திருக்கலாம்னு ஐடியா கொடுத்தாராம். அதை இயக்குனர் பிரபாகரனிடம் ரெண்டரை மணி நேரமாக சொல்லி இருக்கிறார்.

அவரோ மிரண்டு போய் பப்ளிசிட்டிக்காக இதை நாம யூடியூப்ல எல்லாம் போட்டு வியாபாரமா ஆக்கலாமேன்னு சொல்ல, அதற்கு சசிக்குமார் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லையாம். அந்த பெருந்தன்மைக்காகத்தான் சசிக்குமாரையும் பேட்ட படத்தில் நடிக்க வைத்தாராம் ரஜினி என்கிறார் செய்யாறு பாலு.

2023ல் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் நடிப்பில் வெளியான படம் ஜெய்லர். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கதை விவாதத்தில் தலையிட்டு ரஜினி சில மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினியைப் பொருத்தவரை அவர் நடிப்பதோடு சரி. இயக்குனரின் விஷயத்தில் தலையிடவே மாட்டார் என்பது தெரிந்த விஷயம். ஆனால் இந்தப் படத்தில் இப்படி சொல்வது ஆச்சரியமாகவே இருக்கிறது.

1993ல் வெளியான வள்ளி படத்தைத் தயாரித்த ரஜினிகாந்த் அதற்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story