திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....சொல்வது யார் தெரியுமா?
மைக் மோகன் என்ற வார்த்தை 80ஸ் குட்டீஸ்களுக்கு தெரியாமல் இருக்காது. மைக்கைத் தூக்கிவிட்டார் என்றால் இவர் படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்று அர்த்தம். செம சூப்பரான மெலடி ஹீரோக்களில் இவரும் ஒருவர்.
1980களில் மோகன் படங்கள் என்றால் வெள்ளிவிழா தான். இவரது முதல் படம் 1980ல் வெளியான மூடுபனி. இதில் தான் அறிமுகம். 200 நாள்கள் ஓடியது. நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், தீராத விளையாட்டுப்பிள்ளை, லாட்டரி டிக்கெட், இனியவளே வா, கோபுரங்கள் சாய்வதில்லை, சின்னஞ்சிறுசுகள், அந்த சில நாட்கள், ஜோதி, தூங்காத கண்ணின் ஒன்று, சரணாலயம், நெஞ்சமெல்லாம் நீயே, இளமை காலங்கள், மனைவி சொல்லே மந்திரம், நாலு பேருக்கு நன்றி, அம்பிகை நேரில் வந்தால், விதி, மகுடி, வேங்கையின் மைந்தன், நூறாவது நாள், நான் பாடும் பாடல், அன்பே ஓடி வா, 24 மணி நேரம், நிரபராதி, ஓ மானே மானே, ஓசை, ருசி, அன்பின் முகவரி, தெய்வ பிறவி, உதயகீதம், தென்றலே என்னைத் தொடு, குங்குமச்சிமிழ், இதயகோவில்
உனக்காக ஒரு ரோஜா, டிசம்பர் பூக்கள், உயிரே உனக்காக, ஆயிரம் பூக்கள் மலரட்டும், மௌனராகம், மெல்லத்திறந்தது கதவு, பாரு பாரு பட்டணம் பாரு, ரெட்டைவால் குருவி, ஆனந்த ஆராதனை, கிருஷ்ணன் வந்தான், தீர்த்தக்கரையினிலே, நினைக்கத் தெரிந்த மனமே, பாசப்பறவைகள், குங்குமக்கோடு, சகாதேவன் மகாதேவன், வசந்தி, சொந்தம் 16, ஒரு பொண்ணு நெனச்சா, மனிதன் மாறிவிட்டான், இதயதீபம், பாசமழை, வாலிபவிளையாட்டு, ஜகதலப்பிரதாபன், உருவம், அன்புள்ள காதலுக்கு, அர்ச்சனை பூக்கள், ரெட்டைவால் குருவி என பல படங்களில் நடித்து அசத்தியவர். காதல், சோகம், சென்டிமென்ட் என அனைத்து நடிப்புகளையும் யதார்த்தமாக நடித்து உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.
1980 மற்றும் 90களில் ரஜினி, கமலுடன் போட்டி போட்டு நடித்தார். ஹரா என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். உருவம் படத்திற்குப் பிறகு மோகனுக்கு படங்களே இல்லை. அவரும் சினிமாவை விட்டு விலகினார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு எந்த ஒரு திகில் படத்தால் நான் வெளியேறினேனோ அதே போல் திகிலான படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைகிறேன் என்று சொல்லாமல் சொல்கிறார் என அவரது ஹரா படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போது தெரியவருகிறது.