நான் அடிக்கிற அடி சரவெடியா இருக்கும்…உற்சாகம் பொங்குகிறார் நானே வருவேன் தயாரிப்பாளர்

0
291
Nane varuven 2

தனுஷின் மாறுபட்ட இரட்டை வேட நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நானே வருவேன் படம் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உற்சாகம் பொங்க பகிர்கிறார்.

டிக்கட் கிடைக்காம நிறைய பேரு திரும்பிப் போறாங்க. அந்த அளவு நல்ல வரவேற்போடு நானே வருவேன் படம் போயிக்கிட்டு இருக்கு. இந்தப் படத்தைக் கொண்டாடுறாங்க. இது வந்து முழுக்க முழுக்க ஹாலிடே பெஸ்டிவெல் மாதிரி.

Kalaipuli SThanu

அதாவது முதல் பாதி செல்வராகவன் படமா இருக்கும். அடுத்த பாதி தனுஷ் படமா இருக்கும்.

தனுஷ் சார் அடிக்கடி போனில் பேசுவார். மக்கள் அனைவரும் படத்தைப் பார்த்து உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

தனுஷிடம் இந்த நிமிஷம் வரை அவரோட கேரக்டர் பற்றி கேட்டதே இல்ல. எனக்கு செல்வராகவன் தான் கதை சொன்னார். எண்ணங்களை வண்ணங்களாக்கி திரையில் கொடுக்கக்கூடியவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தான். அவருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை.

Selvaragavan

அவரோடலாம் நாம கம்பேர் பண்ண முடியாது. இன்றைய இளம் தலைமுறைக்கு தனுஷைச் சொல்லலாம். செல்வராகவன் சார் எங்கிட்ட சொன்னபோது எனக்கு கதை ரொம்ப நல்லா இருந்தது. கதிர் கேரக்டரை யார் பண்ணப்போறான்னு தான் கேட்டேன். ஒரு செலபரைட்டியைத் தான் வச்சி பண்ணனும்னாரு.

ஏன்னா அந்தக் கேரக்டர் ஹீரோவையேத் தூக்கி சாப்பிடறா மாதிரி இருக்கு. பார்த்துக்கோன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் அந்தக் கேரக்டரையும் ஹீரோவே தான் சார் பண்ணப் போறாரு. நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் யோசனை பண்ணுனேன்னாரு.

Dhanush

அதாவது சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி பொழிந்தது. இரட்டிப்பு சந்தோஷம். இயக்குனர் செல்வராகவனை இந்தப்படத்துக்காக அடிக்கடி சந்திக்க வேண்டியி ருந்தது. எப்படி பண்ணனும்னு சொல்லுங்கன்னு சொல்வாரு. இப்படி பண்ணலாமேன்னு நான் சொல்வேன். இதுவரையிலும் மறுத்துப் பேசுனதே இல்ல.

எனக்கு தெரிஞ்சி 15 நாள் இரண்டு படத்தையுமே (பொன்னியின் செல்வன், நானே வருவேன்) கொண்டாடிடுவாங்க. யுவன் சங்கர் ராஜாவைப் பார்த்து திரும்பவும் ஒங்க கூட்டணி மாபெரும் வெற்றியாயிட்டு.

நல்லா பண்ணுங்கன்னு தான் சொன்னேன். பொன்னியின் செல்வனோட ஜானரே வேற. அதுக்கு கமல், ரஜினின்னு நிறைய பேரு விளம்பரம் செய்யும்போது பெரிய பூஸ்ட் தானே. நானே வருவேன எடுத்துக்கிட்டா ஒண்ணு நான் பேசணும்..

இல்லன்னா செல்வராகவன் பேசணும். எனக்கும் லாபம்…அவங்களுக்கும் லாபம். இதைவிட வேற என்ன வேணும்? முடிவுல பாருங்க. நான் அடிக்கிற அடி…சரவெடியா இருக்கும். மக்களோட மனசைத் தொட்டா தான் அந்தப் படம் வெற்றி. அது வந்தாச்சு.

Nane varuven

எங்களுக்கு வந்து தனித்துவம், மகத்துவம், பிரம்மாண்டத்துவம் இருக்கும். எல்லா பத்திரிகையிலும் நான் நிறைந்து இருப்பேன். தனுஷ் இயக்குனராகறது அவரு கையில இருக்கு. அந்த மாதிரி சூழல் வந்தா நான் ஆராதிப்பேன்.

எனக்கு கிடைக்கலன்னா அடுத்தவருக்கு கிடைச்சா அவரு நல்லா இருக்கட்டும்னு நினைப்பேன். இந்த இன்டஸ்ட்ரி நல்லாருக்கணும். இந்த இன்டஸ்ட்ரிக்கு நான் மட்டும் நல்லாருக்கணும்னு நான் நினைச்சதே கிடையாது. எல்லாரும் நல்லாருக்கணும்னு தான் நினைப்பேன்.

google news