பா.ரஞ்சித் இயக்கிய அட்டகாசமான படங்கள் - ஒரு பார்வை
இயக்குனர்களில் அதிரடியாக படம் இயக்குபவர்களில் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித். இவருடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே கபாலி படத்தில் கைகோர்த்துள்ளார். இவர் இயக்கிய சில படங்கள் குறித்துப் பார்க்கலாமா...
அட்டகத்தி
டைரக்டர் பா.ரஞ்சித் என்றாலே அவரது அட்டகத்தி தான் நம் நினைவுக்கு வரும். அவ்வளவு சூப்பரான படம். தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
ஆசை ஒரு புல்வெளி, அடி என் கான மயில், ஆடி போனா ஆவணி, பொடி வச்சி புடிப்பான், நடுக்கடலுல கப்பலா ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் ஆடி போனா ஆவணி, நடுக்கடலுல கப்பலா ஆகிய பாடல்களைக் கானா பாலா பாடி அசத்தியுள்ளார்.
ரைட்டர்
பிராங்க்ளின் சாக்கோபு இயக்கிய இந்தத் திரைப்படம் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியானது. சமுத்திரக்கனி, திலீபன், இனியா உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இது ஒரு நேர்மையான போலீஸின் கதை.
அவருக்குள் நடக்கும் மனப்போராட்டம் இந்தப்படத்தில் யதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
கபாலி
2016ல் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படம் சக்கை போடு போட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
மாயாநதி, வீர துறந்தரா, உலகம் ஒருவனுக்கா, நெருப்பு டா, வானம் பார்த்தேன் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. வசூலை அதிகளவில் வாரிக்குவித்த படம் இது.
சார்பட்டா பரம்பரை
2021ல் வெளியான இந்தப்படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். பாக்சிங்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
ஆர்யா, ஜான் கோக்கன், ஜான் விஜய், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீயே ஒளி, வம்புல தும்புல, டான்சிங் ரோஸ் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.