ராகவா லாரன்ஸ் செய்த மகத்தான விஷயம்... ஒண்ணு செஞ்சாலும் நின்னு பேசுது பாருங்க..!

by sankaran v |   ( Updated:2024-11-29 12:24:34  )
Raagava
X

Raagava

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் நடிகர் ராகவா லாரன்ஸ். சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தில் நடித்தார். முதல் பாகத்தில் ரஜினிகாந்த் ஏற்ற வேட்டையன் பாத்திரத்தில் நடித்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். அவரது தொடர் ஹிட்டுகளாக காஞ்சனா படங்கள் சக்கை போடு போட்டன.

Akso read: சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..

திரைப்படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படத்தின் பெயர் கால பைரவா. இது அவரது 48வது பிறந்தநாளில் வெளியானது. பான் இண்டியன் படமாகத் தயாராகும் இது ஆக்ஷன் மூவி.

ராகவா லாரன்ஸைப் பொருத்தவரையில் அவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிறந்த சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருகிறார். அனாதை இல்லம், மாற்றுத்திறனாளிகள், முதியோர் இல்லங்களுக்குச் சென்று தன்னால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் ராகவா ஒரு மகத்தான காரியத்தைச் செய்துள்ளார்.

Rudhran

Rudhran

ருத்ரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களது கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கல்வி கற்பதற்கு உதவி செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையையும் நல்வழிக்கு மாற்றுவதே கல்வி தான். அதைக் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இவரைப் போல மற்ற நடிகர்களும் சேவைகள் செய்யலாம்.

Akso read: மருமகள் முதல் கயல் வரை… இன்றைய சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்

அதற்கு அரசியலோ, நற்பணி மன்றங்களோ கூட தேவையில்லை. செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த படம் ருத்ரன். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்பட பலரும் நடித்துள்ளனர். இது 2023ல் வெளியானது.

Next Story