வரும் வருடம் அதாவது 2026ல் முன்னணி நடிகைகளின் இன்னொரு அவதாரத்தை நாம் பார்க்கப் போகிறோம். ஆம். இதுவரை ரொமான்ஸ், டூயட் என நடிகர்களுடனேயே ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்டு கொண்டிருந்த நடிகைகள் ஆக்ஷன் மோடுக்கு மாறியிருக்கின்றனர். 2026ல் ஒரு சில நடிகைகளின் ஆக்ஷன் சார்ந்த படங்கள் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றன.
முதலாவதாக நயன்தாரா. அறிமுக இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்கும் ஒரு படத்தில் நயன் நடிக்கிறார். அந்தப் படத்திற்கு ராக்காயி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒரு கையில் அரிவாளுடன் இன்னொரு கையில் கத்தியுடன் நயன் நிற்கும் அந்தப் போஸ்டர் பயங்கரமாக இருந்தது.
Also Read
இதில் நயன்தாரா துணிச்சலான தாயாக நடிக்கிறார். அவரின் வித்தியாசமான ஆக்ஷன் அவதாரத்தை இந்தப் படம் காட்டப் போகிறது. இந்த வருடமே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா திரைப்படம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.பான் இந்தியா திரைப்படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
அடுத்ததாக சமந்தா நடிப்பில் பங்காரம் என்ற படமும் தயாராகிவருகிறது. சமந்தாவின் பிறந்தநாளின் போது இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை சமந்தாவின் தயாரிப்பு கம்பெனிதான் தயாரிக்கிறது. இதுவும் ஒரு ஆக்ஷன் பின்னணியில் தான் உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா ஆக்ரோஷமாக இருந்தார்.
அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அக்கா என்ற வெப் தொடர். இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இது ஒரு பழிவாங்கும் திரில்லர் தொடராக உருவாக இருக்கிறது. தர்மராஜ் ஷெட்டி இந்த தொடரை எழுதி இயக்குவார். மேலும் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்பு நிறுவனமான YRF என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது.



