23 கெட்டப்பில் கலக்கும் கமல்... அதே நேரம் சொந்தப் படத்துக்கு வந்த சிக்கலைப் பாருங்க..!

by sankaran v |   ( Updated:2024-08-13 16:36:12  )
Kamal
X

Kamal

உலகநாயகன் தற்போது பம்பரமாக சுழன்று பல படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவுக்கும் போய் பல தொழில்நுட்பங்களைக் கற்று வருகிறார். தினமும் ஒரே வேலையைப் பார்க்கும் நமக்கே அது எப்போடா முடியும்னு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஆனா ஒரே ஆளாக உலகநாயகன் எத்தனை வேலைகளைப் பார்க்கிறார்? அவருக்கு எவ்வளவு சிக்கல்கள், எத்தனை சவால்கள் வரும் என்று எண்ணிப் பாருங்கள். அவரைப் பற்றி லேட்டஸ்டாக வந்த அப்டேட்டுகளைப் பார்ப்போம்.

கல்கி 2ம் பாகத்தில் நந்து மாதிரி ஒரு கெட்டப். மொத்தம் 6 பாகத்தில் 23 கெட்டப்பாம். அதனால கல்கி 2ம் பாகத்தில் 6 கெட்டப்கள் வரலாம். 30 நாள்கள் கல்கி படத்துக்காக கமலிடம் கால்ஷீட் கேட்டு இருக்காங்களாம். இந்தியன் 3 படத்துல ரெட்ஜெயண்ட் விலகுவதாகவும், லைகாவும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்சும் மட்டுமே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படம் வந்தால் தான் இதுபற்றிய முழுவிவரம் தெரியவரும்.

சத்யராஜ்கிட்ட பிக்பாஸ் பற்றி ஆஃபர் வந்துருக்காமேன்னு கேட்குறாங்க. பிக்பாஸ் யார் பண்ணது? கம்பேரிசன்லயே நம்மளைக் கொன்னுடுவாங்க. அவரோட பொசிஷனுக்கு எல்லாம் நாம போக முடியாதுன்னு ஒரே போடாக போட்டாராம் சத்யராஜ்.

Amaran

Amaran

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் அமரன் படத்தில் இருந்து சோனி நிறுவனம் வெளியேறி விட்டதாம். எஸ்டிஆர் 48 படம் பண்ணாததுக்குக் காரணம் சோனி வெளியேறியது தானாம். அந்த நிறுவனம் தயாரிப்பு விஷயத்தில் ரொமப் கறாராக இருந்ததால் கமலே படத்தைத் தனியாகத் தயாரிப்பதாக முடிவு எடுத்து விட்டார்.

அந்த வகையில் படமும் அக்டோபர் 31ல் ரிலீஸ் ஆகிறது. படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல. கமல் ரசிகர்களுக்கும் ரொம்பவே உள்ளது. அமரன் வெற்றிவாகை சூடுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

எது எப்படியோ, தடைகளைத் தாண்டி சரித்திரம் படைக்கும் கமலுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சாதனைகளாக மாற்றத் தெரியாதா என்றே அவரது ரசிகர்கள் தரப்பில் சொல்லப்படும் விஷயமாக உள்ளது.

Next Story