மூணு பாட்டும் புஸ்ஸுனு போச்சி!.. நாலாவது சிங்கிளாவது தேறுமா?!.. கோட் பட புது அப்டேட்!..
GoatMovie: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பாட்டாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். விஜய், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடம் என்று நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்தா இப்படி ஒரு கேள்வியா கேட்பீங்க? நமீதாவுக்கு ஏற்பட்ட அவமானம்
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். பொதுவாகவே விஜய் திரைப்படங்களில் உள்ள பாடல்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும். ஆனால் கோட் திரைப்படத்தில் இதுவரை வெளியான எல்லா பாடல்களுமே விமர்சனத்தை மட்டுமே குவித்திருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த பாடல்களும் பூர்த்தி செய்யவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை உள்ளடக்கி இருக்கும் கோர் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அது மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடக்காது. ஏற்கனவே விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால் அதன் மாநாடு நடக்க இருக்கிறது.
இதையும் படிங்க: ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா… பங்ஷனுக்கு வரும் கோபி… திட்டு வாங்கும் தங்கமயில்..
இந்நிலையில் கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடக்க வேண்டாம் என்பது விஜய் தரப்பு முடிவாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது கோட் திரைப்படத்தின் நான்காவது சிங்கிளை வெளியிடப்பட குழு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 30 அல்லது 31 இந்த பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்பாடல் நடிகை திரிஷா இடம்பெற்ற பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மூன்று பாடல்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படம் வெளியாகும் நேரத்தில் இப்பாடலாவது ஹிட் அடிக்குமா என்பது பட குழுவின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.