முதல் படம் அட்டர் ஃப்ளாப்- ஆனால் அதற்கு பிறகு செம ஹிட் படங்களை இயக்கிய 5 இயக்குநர்கள்!!

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் முதல் படத்தை அட்டர் ஃப்ளாப்பாக எடுத்துவிட்டு, அடுத்தடுத்து சூப்பர் படங்களை இயக்கிய 5 இயக்குநர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சமுத்திரக்கனி

samuthirakani
நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி முதன்முதலில் இயக்கிய படம் உன்னைச் சரணடைந்தேன். இந்த படத்தில் வெங்கட் பிரபு, எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் அதற்கு பிறகு நாடோடிகள், அப்பா என பல ஹிட் படங்களை சமுத்திரகனி இயக்கியுள்ளார்.
தரணி
இயக்குநர் தரணி தில், தூள், கில்லி என பல மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அவர் முதன்முதலில் 1999ம் ஆண்டு இயக்கிய படம் எதிரும் புதிரும். இந்த படத்தில் மம்முட்டி, நெப்போலியன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மகிழ் திருமேனி

Magizh Thirumeni
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய முதல் படம் முன்தினம் பார்த்தேனே. இந்த படம் வந்ததே பலருக்கு தெரியாது. ஆனால் அதற்கெடுத்து தடம், தடையற தாக்க என பல சூப்பர் படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் அஜித்தின் விடா முயற்சி படத்தை இயக்கி வருகிறார்.
சீனுராமசாமி
இயக்குநர் சீனுராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆனால் கடந்த 2007ம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படமான கூடல்நகர் படம் சரியாக ஓடவில்லை. இந்த படத்தில் பரத், பாவனா, சந்தியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மணிரத்னம்

maniratnam2
இயக்குநர் மணிரத்னம் அலைபாயுதே, ரோஜா, இருவர், பாம்பே தொடங்கி தற்போது வெளியான பொன்னியின் செல்வன் வரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அவர் இயக்கிய முதல் படம் படுதோல்வி அடைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இயக்குநர் மணிரத்னம் இயக்கிய முதல் படம் பல்லவி அனுபல்லவி. கன்னட மொழியில் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது.