கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் 8 டாப் ஹீரோக்கள்… யார் யார்ன்னு தெரிஞ்சா அசந்துப்போயிடுவீங்க!!
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், மணி ரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸுடன் இணைந்து கமல்ஹாசன், மணி ரத்னம் ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 8 டாப் ஹீரோக்கள் நடிக்க உள்ளார்களாம். இதில் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. மேலும் மற்ற மொழி கதாநாயகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி 67 படத்தில் சீயான் விக்ரம்?? லோகேஷ் செமத்தியா ஒரு பிளான் வச்சிருக்கார் போல…
இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவருவதால், இதில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த டாப் ஹீரோக்களை நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவு செய்திருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் பா.ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.