Connect with us
Sivaji, Beemsingh

Cinema History

850 அடி.. ஒரே டேக்… நீண்ட வசனத்தை பொளந்து கட்டிய சிவாஜி!.. பிரமித்த தமிழ்த்திரை உலகம்!

தமிழ்த்திரை உலகின் சிம்ம சொப்பனம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் போல நடிக்க இனி ஒரு நடிகன் பிறந்து கூட வர முடியாது. அந்த அளவு பல சாகசங்களை சினிமா உலகில் படைத்துள்ளார். அவற்றில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடித்த ராஜாராணி படத்தில் இடம்பெற்ற சேரன் செங்குட்டுவன் என்ற ஓரங்க நாடகத்தை ஒரே ஷாட்டில் படமாக்க நினைத்தார் இயக்குனர் பீம்சிங். ஆனால் 850 அடிக்கும் வசனத்தை இடைவிடாது பேச வேண்டும். அதற்கு சிவாஜி சம்மதிக்க வேண்டுமே என்று யோசித்தார் பீம்சிங்.

இதையும் படிங்க… கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை!.. யோகி பாபுவுக்கு ஜோடியான சிம்பு பட ஹீரோயின்.. யாருன்னு பாருங்க!

அந்த நேரம் அங்கு வந்த சிவாஜி, இதைப் பற்றி ஏன் யோசிக்கிறீங்க.? நான் 850 அடிக்கும் வசனத்தைப் பேசி நடிக்கத் தயார். நீங்க படத்தை எடுக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்க என்றாராம். அதற்குப் பிறகு அந்த ஷாட்டை ஒரே டேக்கில் எடுக்க அதில் ஒரு இடத்தில் கூட தங்கு தடை இல்லாமல் கலைஞர் வசனத்தைப் பேசி அசத்தினார் சிவாஜி.

எனக்குத் தெரிந்து தமிழ்சினிமா உலகில் 850 அடிக்கும் ஒரே டேக்கில் வசனம் பேசி நடித்த ஒரே நடிகர் யாருன்னா அது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மட்டும் தான். இவ்வாறு சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Raaja Raani

Raaja Raani

1956ல் கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படம் ராஜா ராணி. சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜ சுலோச்சனா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர்.பாப்பா. பாடல்கள் எல்லாமே சிறப்பு.

முதல் படமான பராசக்தியில் தான் சிவாஜி அதுவும் அந்தக் கோர்ட் சீனில் நீண்ட வசனம் பேசியுள்ளார் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அதையும் தாண்டி அசர வைத்த படம் தான் இது. ஒரே டேக்கில் ஏற்ற இறக்கத்துடன் எவ்வளவு தெளிவாக சிறு பிசிறும் கூட தட்டாமல் அருமையான உச்சரிப்புடன் வசனம் பேசியுள்ளார் என்பதைப் பார்க்கும்போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

google news
Continue Reading

More in Cinema History

To Top