Connect with us
manjari

Cinema News

இவங்களாம் இப்போ எங்க போனாங்க? 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்து காணாமல் போன பிரபலங்கள்

90s celebrity: பொதுவாக 2k கிட்ஸ்சை விட 80 கிட்ஸ் 90 கிட்ஸ் இவர்களுக்கு தான் சினிமா மீது அதிக ஆர்வம் உண்டு. நடிகர் நடிகைகளை மிகவும் கொண்டாடி வந்தனர். அதுவும் 90ஸ் கிட்ஸ் பொதுவாக அதை பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். நாங்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ். எங்க காலகட்டத்தில் இருக்கிற சினிமா மாதிரி வருமா என இப்போது உள்ள இளைஞர்களை பார்த்து அடிக்கடி சொல்வதுண்டு.

அந்த வகையில் 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்து இப்போது சினிமாவை விட்டு காணாமல் போன பிரபலங்கள் பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். சின்னத்திரை நடிகை மஞ்சரி. உறவுகள் என்ற சீரியல் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் தான் மஞ்சரி. அந்தன் காலத்தில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளங்களே இருந்தனர்.

இதையும் படிங்க: தரக்குறைவாக பேசிய வடிவேலுவுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்த அஜித்! இது யாருக்காவது தெரியுமா?

இளசுகளை கொள்ளை கொண்ட ஒரு கனவு நாயகி என மஞ்சளியை சொல்லலாம். அண்ணாமலை, கோலங்கள் அலைகள் போன்ற சூப்பர் ஹிட் ஆன சீரியல்களில் மஞ்சரி நடித்து மிகவும் பிரபலமானார். தென்னிந்திய சீரியல்களிலேயே அதிகமாக நடித்த நடிகை என்றால் இவர்தான். கிட்டத்தட்ட 50க்கும் மேலான சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இப்போது சிங்கப்பூரில் செட்டிலாகி சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறாராம். அடுத்ததாக மோகினி. ஐஸ்வர்யா ராய்க்கு முன்பாகவே பூனை கண்ணுக்கு பேர் போன நடிகை மோகினி. இவருடைய உண்மையான பெயர் மகாலட்சுமி. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் இவர் ஆடிய அந்த ஒரு பாடல்  ‘பட்டுச் சேலை மடிப்பில் நான் கசங்கி போனேன்டி’ இந்த பாடலை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

இதையும் படிங்க: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்!.. அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் இல்லையாம்!..

தன்னுடைய சிறு பிள்ளைத்தனமான சிரிப்பாலும் சுட்டி குழந்தைத்தனமான முகத்தாலும் இந்த பாட்டில் அவ்வளவு அழகாக இருப்பார். கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்திருக்கிறார் மோகினி. இவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு வாஷிங்டனில் செட்டில் ஆகிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் ஆர்த்தோடாக்ஸ் பிராமணரான இவர் இப்போது மதம் மாறி கிறிஸ்டியன் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது.

aடுத்து அபர்ணா பிள்ளை. தனுஷுடன் புதுப்பேட்டை படத்தில் நடித்தவர் தான் அபர்ணா பிள்ளை. இந்த ஒரு படத்திலேயே நல்ல ஒரு வரவேற்பை பெற்றார். அதன் பிறகு இரண்டு மூன்று படங்கள் நடித்து ஒரு டாக்டரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் கைவசம் பல பிசினஸ்களை செய்து கொண்டு வருகிறாராம். தனியாக இரண்டு பள்ளிக்கூடங்களை நிர்வகித்தும் வருகிறாராம்.

இதையும் படிங்க: கமல் படத்துக்கு முட்டுக்கட்டையா? என்ன இது புதுத்தகவலா இருக்கே..?!

அது மட்டும் அல்லாமல் சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒரு சிங்க பெண்ணாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கின்றார். அடுத்ததாக காயத்ரி ரகுராம். 90 கிட்ஸ்களின் செல்லப்பிள்ளை என்ற இவரை சொல்லலாம். பக்காவான தமிழ் நடிகை காயத்ரி ரகுராம். ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வர ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தாராம்.

நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ் போன்ற விளம்பரங்களில் இவரை அப்போதைய காலகட்டத்தில் பார்க்க முடியும். முதன்முதலில் கன்னட மொழியில் நடிகர் அர்ஜுனால் அறிமுகமான நடிகைதான் காயத்ரி ரகுராம். தமிழில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான காயத்ரி அதன் பிறகு தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து செகண்ட் ஹீரோயினாக மாறி அதன் பிறகு குணசத்திர வேடங்களில் நடித்து அப்படியே காணாமல் போய்விட்டார். ஆனால் ஒரு சில சீரியல்களில் இவரை பார்க்க முடிகிறது. இப்படித்தான் இவருடைய சினிமா கரியர் சென்று கொண்டிருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top