Connect with us

Gossips

ஆண்டவரிடமும் வேலை காட்டிய அனிருத்.! வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு திரியும் லோகேஷ்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நரேன் என பலர் நடித்துள்ளனர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

vikram2_cine

 

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வழக்கம்போல இந்த படத்திற்கும் இளசுகளை துள்ள வைக்கும் துள்ளலான இசையை கொடுத்துள்ளார். ஆனால் வழக்கம் போல தனது வேலையை காட்டியுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் –  அஜித் கூறும் குட்டி கதை.?! ஊர் வாயை மூடவே முடியாது.! வைரலாகும் கழுதை, தம்பதி.!

தமிழ் சினிமாவில் பிரபலமான பல படங்கள் அனிருத் கைவசம் தான் உள்ளது. அதனால், அவர் இசையமைக்க காலதாமதம் ஆகிறதாம். அதனால், தான் அண்மையில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிண்ணனி இசை தாமதமாகியதாக ஒரு தகவல் வெளியானது.

vikram3_Cine

அதே போல தான் தற்போது விக்ரம் படத்திற்கு பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தாமதமாகிறதாம்.  இதனால் வெளிநாட்டு வியாபாரங்கள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளதாம். அனிருத் எப்போது தருவாரோ, அதில் கரெக்சன் சொல்ல முடியுமா என விக்ரம் படக்குழு வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறதாம்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top