Connect with us

Cinema News

மணிரத்னம் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்.! பொன்னியின் செல்வனால் இடுப்பழகிக்கு வந்த சோதனை…

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது அவரது கனவு திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கான வெளியீட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்திற்கு எ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் நேற்று ஒரு சிறிய வீடியோ வெளியானது. அதில் சோழன் வருகிறான் என்று வாசகம் எழுதப்பட்டு ஒரு கொடி பறப்பது போலவும் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதியும் அதன் கீழே குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ நேற்று சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வந்தது. அந்த சமயம் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில், அவரது பர்சனல் மெசேஜ் பக்கத்தில், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அனுப்பியது போல ஒரு நபர் அந்த வீடியோவை அனுப்பி விட்டார்.

இதையும் படியுங்களேன் –  சிவகார்த்திகேயனுக்கு ஜிம் பீஸ் கட்டிய தனுஷ்.! எப்படியெல்லாம் வளர்த்து விட்டுருக்கார் பாருங்க…

அதாவது பொன்னியின் செல்வன் கதைக்களம் பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. ஆதலால், சோழர்களை பற்றி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் வீடியோவை, ரம்யா பாண்டியனுக்கு அனுப்பி அந்த நெட்டிசன் குளறுபடி செய்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து தான் அது போலி அக்கவுண்ட் மூலம் ரம்யா பாண்டியனுக்கு அனுப்பப்பட்டது என்ற விவரம் தெரியவந்தது. சிலர் படத்தின் பிரமோஷனுக்காக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படி செய்துவிட்டதோ என்று நினைத்து விட்டனர். ஆனால், அது பொய் என சிறிது நேரத்தில் நிரூபணம் ஆகிவிட்டது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top