
Cinema News
எம்.ஜிஆரிடம் செம டோஸ் வாங்கிய பிரபல இசையமைப்பாளர்… அய்யா மன்னிச்சிடுங்கனு கையெடுத்து கும்பிட்டதால் விட்டாராம்…
Published on
By
எம்.ஜி.ஆர் தேர்தல் களத்தில் கேட்ட ஒரு பாட்டால் மிகவும் கடுப்பாகி அந்த இசையமைப்பாளரையே கூப்பிட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
கங்கை அமரன் இயக்குநராக அறிமுகமான படம் கோழி கூவுது. இப்படத்தின் தலைப்பை கொடுத்தவர் அவரது சகோதரர் இளையராஜா தானாம். இப்படத்தின் தான் நடிகை விஜி அறிமுகமானார். பிரபு, ஸ்மிதா, சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
gangai amaran
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சாமுவேல் க்ரூப் பாடிய ஒரே திரைப்படப் பாடல் “அண்ணே அண்ணா”. இந்த பாடலில் வந்த ஒரு வரியால் தான் எம்.ஜி.ஆரே டென்சன் ஆகி விட்டாராம்.
இதையும் படிங்க: ராமராஜனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் இசைஞானி… பல வருட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் வெற்றி காம்போ!!
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண என அந்த பாடலில் இருந்த ஒரு வரியை எடுத்து யாரோ போஸ்டர் அடித்துள்ளனர். அதை பார்த்த எம்.ஜி.ஆர் என்ன வரி யார் படம் எனக் கேட்டதும் கங்கை அமரன் பேரை சொல்லி இருக்கிறார்கள். உடனே அவரை அலுவலகத்திற்கு வரக்கூறி எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்திருக்கிறது.
gangai amaran
உடனே கிளம்பி சென்றவருக்கு என்ன இப்படியா பாட்டு வைப்பீங்க. என்ன அரசியல் விமர்சனம் எனக் கேட்டு இருக்கிறார். கங்கை அமரனோ பதறியடித்து அப்படியெல்லாம் இல்லை. அது சாதாரணமாக ராணுவ வீரர்கள் குறித்து எழுதப்பட்ட பாடல் தான். கண்டிப்பாக அதில் எந்தவித அரசியலும் இல்லை என்றாராம்.
அதைக்கேட்ட எம்.ஜி.ஆர் சரி எதோ தெரிஞ்ச ஆளா போய்ட்டீங்க பொழைச்சு போங்க எனக் கூறி அவரை விட்டாராம். இதை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார்.
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...