மருத்துவமனையில் அஜித்… வேறு நடிகரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

Published On: December 30, 2022
Ajith Kumar
---Advertisement---

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத டாப் நாடிகராக திகழ்ந்து வரும் அஜித்குமார், அவரது வாழ்க்கையில் பல அடிகளையும், அவமானங்களையும், தடைகளையும் தாண்டி முன்னணி நடிகராக முன்னேறியவர்.

அஜித்குமார் “என் வீடு என் கணவர்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கில் “பிரேம புஸ்தகம்” என்ற திரைப்படத்தில் நடித்த அஜித்குமார், தமிழில் “அமராவதி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Ajith Kumar
Ajith Kumar

இதனை தொடர்ந்து “பவித்ரா”, “ஆசை”, “வான்மதி”, “கல்லூரி வாசல்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களை தொடர்ந்து அஜித்குமார் நடித்த “காதல் கோட்டை” திரைப்படம் அவரது சினிமே கேரியரில் திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது.

“காதல் கோட்டை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் அஜித்திற்கு குவிந்தன. இதனிடையே “ஆனந்த பூங்காற்றே” என்ற திரைப்படத்தில் அஜித் ஒப்பந்தமானார். அந்த தருணத்தில் அஜித்திற்கு விபத்து ஏற்பட்டு முதுகில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலையில் அஜித் இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்தபிறகு “ஆனந்த பூங்காற்றே” திரைப்படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது.

Ajith Kumar
Ajith Kumar

ஆனால் அதற்குள் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான காஜா மைதீனுக்கு நெருக்கமானவர்கள், “அஜித் ஆப்ரேஷன் முடித்து வந்து நடிப்பதெல்லாம் நடக்குற காரியம் இல்லை, ஆதலால் வேறு ஒரு நடிகரை போடலாம். அஜித் குணமானப்பின் வேறு ஒரு படத்தில் அவரை ஹீரோவாக போடலாம்” என கூறினார்களாம். அவர்களின் பேச்சை கேட்ட காஜா மைதீன், அஜித்திற்கு பதில் பிரசாந்த்தை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தாராம்.

Prashanth
Prashanth

அதன்படி பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜனிடம் பேசினாராம். ஆனால் முதலில் தியாகராஜன் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் அவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தார் தயாரிப்பாளர். அதனை தொடர்ந்து அவருக்கு நெருங்கிய ஒருவர் பத்திரிக்கையில் “ஆனந்த பூங்காற்றே’ திரைப்படத்தில் மீனா, கார்த்திக், ஆகியோருடன் பிரசாந்த்தும் நடிக்கிறார் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுவிட்டாராம்.

அதனை தொடர்ந்து அஜித்தின் ஆப்ரேஷன் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் அஜித்தை மருத்துவமனையில் பார்க்க சென்றாராம் மொய்தீன். அப்போது அஜித்தின் கையில் பிரசாந்த், மீனா, கார்த்திக் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்த அந்த பத்திரிக்கை அவர் கையில் இருந்ததாம்.

இதையும் படிங்க: மீனாவுடன் போட்டிப்போட்டு பிடிவாதம் பிடித்த முரளி… பத்தே நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாடல்…

Anantha Poongatre
Anantha Poongatre

அப்போது மொய்தீனை பார்த்து அஜித் “நான் திரும்ப வரமாட்டேன்ன்னு நினைச்சிட்டீங்களா?” என கேட்டாராம். அஜித் குமார் அவ்வாறு கேட்டவுடன் மொய்தீனுக்கு தர்ம சங்கடமாக போய்விட்டதாம். மேலும் அஜித் அவர் முன்னமே கண்கலங்கத் தொடங்கினாராம். உடனே காஜா மொய்தீன் அஜித்திடம் “ஆனந்த பூங்காற்றே படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள்” என கூறி, அவரை தேற்றினாராம். அதன் பின் தனது உடல்நிலை சரியான பிறகு அஜித் அத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.