ரசிகர்களின் ஆட்டத்தை தாங்காத தமிழ் சினிமா!.. இதற்கு விதை போட்டதே ரஜினிதானாம்.. என்ன விஷயம் தெரியுமா?..

Published on: January 26, 2023
Rajinikanth
---Advertisement---

தமிழ் சினிமாவில் கோலோச்சி நிற்கும் நடிகர்களுக்கு பக்கபலமாக இருப்பதே அவர்களது ரசிகர்கள் தான். ஒவ்வொரு நடிகருக்கும் எந்த அளவு மார்கெட் இருக்கிறது? யாருக்கு அதிக அளவு செல்வாக்கு இருக்கிறது ? என்பதை ரசிகர்கள் செய்யும் செயல்கள் மூலமாக மிக எளிதாக கண்டு கொள்ளமுடியும்.

Rajini and Kamal
Rajini and Kamal

அன்று அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உள்ளடக்கிய நடிகராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருந்தார். எம்ஜிஆருக்காக உயிரை விடும் அளவிற்கு ஒட்டுமொத்த தமிழ் நாடே அவரின் ரசிகர்களாக உருவெடுத்தது. அதற்கடுத்தப்படியாக ரஜினி, கமல், அஜித், விஜய் என இந்த தலைமுறைகளில் கோலோச்சி வருகின்றனர்.

Vijay and Ajith
Vijay and Ajith

அதுவும் தனது தலைவனின் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்களின் ஆட்டத்தை அடக்க முடியாது. இதற்கு ஒரு உதாரணம் தான் சமீபத்தில் உயிரிழந்த அஜித் ரசிகர் ஒருவர். துணிவு படத்தின் ரிலீஸை கொண்டாட போய் உயிர் போனது தான் மிச்சம்.

இன்னும் உச்சக்கட்டமாக கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் பண்ணுவது என அவர்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றது. நடிகர்களும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் ரஜினி, விஜய், அஜித் , தனுஷ், சூர்யா என முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் சமயத்தில்

இதையும் படிங்க: பதற வைக்கவும் தெரியும்.. சிரிக்க வைக்கவும் தெரியும்!.. காமெடியில் இறங்கி கலக்கும் பிரபல வில்லன் நடிகர்கள்!..

Rajinikanth
Rajinikanth

பெரிய பெரிய பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் பண்ணுகின்றனர். இதற்கு முதல் விதையாக முதன் முதலில் ரசிகர்கள் பாலாபிஷேகம் பண்ணியது ரஜினியின் கட் அவுட்டுக்குத்தானாம். அது அப்படியே தொடர்ந்து இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.