நடிகராவதற்கு முன்பே மணிரத்னம் படத்தில் நடித்த அஜித்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Published on: February 3, 2023
Mani Ratnam and Ajith Kumar
---Advertisement---

நடிகர் அஜித் குமார், கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக “என் வீடு என் கணவர்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தெலுங்கில் “பிரேம புஸ்தகம்” என்ற திரைப்படத்தின் மூலமும் தமிழில் “அமராவதி” திரைப்படத்தின் மூலமும் அறிமுகமானார்.

Ajith Kumar
Ajith Kumar

இந்த நிலையில் அஜித் குமார் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே மணி ரத்னம் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவலை பிரபல நடிகரும் கண்ணதாசனின் மகனுமான அண்ணாதுரை கண்ணதாசன் தனது வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.

Annadurai Kannadasan
Annadurai Kannadasan

இயக்குனர்களாகவும் ஒளிப்பதிவாளர்களாவும் இணைந்து பணியாற்றி வந்த ராபர்ட்-ராஜசேகர் ஆகியோரிடம் அண்ணாதுரை கண்ணதாசன் தொடக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அவருடன் சக உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் ரமணன். இவர் இயக்குனர் மணி ரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோருடன் மிக நெருக்கமாக பழகி வந்தாராம்.

மணி ரத்னம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் பிற்காலத்தில் மிகப் பிரபலமான கலைஞர்களாக உயர்ந்துவிட தனக்கு ஒரு திருப்புமுனையான வாய்ப்பு அமையவில்லையே என ரமணன் ஏங்கினாராம். மேலும் அவருக்கு குடி பழக்கம் வேறு அதிகமாக இருந்ததாம்.

இதனிடையே ரமணன் தான் உருவாக்கவுள்ள திரைப்படத்திற்காக ஒரு கதையை எழுதியிருந்தாராம். அந்த கதையில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தை தழுவிதான் மணி ரத்னம் தனது “மௌன ராகம்” திரைப்படத்தில் கார்த்திக்கின் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருந்தாராம்.

Mani Ratnam
Mani Ratnam

இதனை தொடர்ந்து ஒரு நாள் மணி ரத்னம், ரமணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்தாராம். ஆனால் ரமணன் ஏற்கனவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் அவரை நம்பி எப்படி பணம் போடுவது என்ற குழப்பத்தில் இருந்தாராம்.

எனினும் ரமணனிடம் எதாவது கதை இருக்கிறதா என கேட்டிருக்கிறார் மணி ரத்னம். அதற்கு ரமணன் ஒரு கதையை கூற, அதற்கு மணி ரத்னம் “ஹீரோ ஹீரோயினை எல்லாம் நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆனால் முதலில் ஒரு ஒத்திகைக்காக ஒரு காட்சியை மட்டும் எடுத்துக்கொடு. அது எப்படி வருகிறது என்பதை பார்த்துவிட்டு மேற்கொண்டு படத்தை எடுக்கலாம்” என கூறியிருக்கிறார்.

Mani Ratnam
Mani Ratnam

அதன் படி சில நாட்களில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர். மணி ரத்னம் தேர்வு செய்து வைத்திருந்த ஹீரோ ஹீரோயினை வரவழைத்து கேமரா மேன் போன்ற பலரையும் வரவழைத்துவிட்டார்கள்.

அதன் பின் அந்த காட்சியை படமாக்கத் தயாரானபோது ரமணனுக்கு வலிப்பு வந்துவிட்டதாம். 10 நிமிடம் கழித்து வலிப்பு சரியான பின் ரமணன் “என்னப்பா, ஷூட்டிங் தொடங்கலயா? என்ன சும்மா நின்னுட்டு இருக்கீங்க?” என கேட்டாராம். அதாவது அவருக்கு வலிப்பு வந்தது அவருக்கே ஞாபகம் இல்லையாம். இப்படி ஒத்திக்கை பார்க்கும்போதே வலிப்பு வருகிறதென்றால், நாளை ரமணனை நம்பி எப்படி பணம் போடுவது என்று எண்ணிய மணி ரத்னம் அந்த புராஜக்ட்டையே டிராப் செய்துவிட்டாராம்.

Ajith Kumar
Ajith Kumar

அதன் பின் ஒரு நாள் அந்த ஒத்திகையில் நடித்த ஹீரோ, பைக்கில் சென்று அடிபட்டதாக கேள்விப்பட்ட ரமணன், அவரை சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்தாராம். பின்னாளில்தான் அண்ணாதுரை கண்ணதாசனுக்கு தெரியவந்ததாம், அந்த ஒத்திகையில் நடித்த நடிகர் அஜித்குமார்தான் என்று.

இதையும் படிங்க: கங்கை அமரனை விட்டுவிட்டு தனியாக சாப்பிட முடிவெடுத்த இளையராஜா… அந்த பிரபலமான ரஜினி பாடல் உருவானது இப்படித்தான்!!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.