கோலிவுட்டின் இயக்குனர் இமயமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாரதிராஜா. ஆரம்பத்தில் நடிகனாக வேண்டும் என்பதே இவருடைய ஆசை. அதன் காரணமாகவே சென்னைக்கு வந்து கோடம்பாக்கத்தையே ஒரு ரவுண்டு கலக்கி இருக்கிறார் பாரதிராஜா. சினிமாவில் வருவதற்கு முன்பே இளையராஜாவுடன் நல்ல நெருக்கம் கொண்டவர் பாரதிராஜா.
வல்லமை படைத்த பாரதிராஜா
பாரதிராஜா முதலில் நாடகங்களை இயக்குவதில் வல்லமை படைத்தவராக இருந்திருக்கிறார். தன்னுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பருவத்திலேயே பள்ளி நாடகத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்து சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை அப்பவே வாங்கி இருக்கிறாராம். அதன் காரணமாகவே பல நாடகங்களை நடத்தி இருக்கிறார் அதில் இளையராஜாவை கச்சேரியும் செய்ய வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : விடிவுகாலம் பொறாந்தாச்சு! விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கும் கண்ணாடி ஹீரோ – இது லிஸ்ட்லயே இல்லையே

இந்த நட்புதான் அவர்களை சினிமாவிலும் இணைக்க ஒரு பாலமாக அமைந்தது. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. முதல் படத்திலயே முத்திரை பதித்தவர் சிகப்பு ரோஜாக்கள் என்ற ஒரு தரமான படத்தைக் கொடுத்து இனி நான்தான் ராஜா என்பதை நிரூபித்து காட்டினார்.
ஒரு பேட்டியில் பாரதிராஜா தன்னைப் பற்றியே கூறும் போது நான் பல பேரிடம் சண்டை போட்டதாகவும் பல நடிகர் நடிகைகளிடமும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறினார். அதாவது உதவி இயக்குனராக இருந்த சமயத்திலேயே இயக்குனர்களின் ஷார்ட்டுகளை குறை சொன்னவராம் பாரதிராஜா. இவர் ஏதாவது குறை சொன்னால் உடனே இவரை அந்த செட்டை விட்டே விரட்டி விடுவார்களாம்.
படத்தில் ஏற்பட்ட சலசலப்பு
அப்படிதான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சிவக்குமார் கமல் ஜெயசித்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் தேன் சிந்துதே வானம். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தை சங்கரன் என்பவர் இயக்கினார். அப்போது அந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம் பாரதிராஜா. அப்போது ஒரு காட்சியில் சிவக்குமார் ஒரு இடத்திலேயும் ஜெயசித்ரா ஒரு இடத்தில் இருந்து காட்சிகள் வைக்கப்பட ஜெயசித்ரா வேறெங்கோ பார்த்துக்கொண்டு வசனங்களை பேசினாராம்.
இதையும் படிங்க : அப்போ தேவைப்படல! இப்போ மட்டும் தேவைப்படுதா? பயில்வானின் கேள்வியால் பயங்கர அப்செட்டில் ஹன்சிகா

அப்போது அதை பார்த்துக்கொண்ட பாரதிராஜா இந்த ஷார்ட் மிகவும் தவறுதலாக எடுக்கப்படுகின்றது என கூறினாராம். ஆனால் அதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதுமட்டுமில்லாமல் ஜெயசித்ராவிற்கு டயலாக் சொல்லும் பணியை பாரதிராஜா தான் செய்திருக்கிறார். அப்போது டயலாக்கை பாரதிராஜா சொல்லும்போது ஜெயசித்ரா ஆடிக்கொண்டே தன்னுடைய அலங்காரத்தை செய்து கொண்டே கேட்டிருக்கிறார்.
அந்தர் பல்டி அடித்த நடிகை
ஷார்ட் ரெடி ஆனதும் பாரதிராஜாவிடம் டயலாக் சொல்லியாச்சா எனக் கேட்க இவரும் ஆம் சொல்லிவிட்டேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் ஜெயசித்ரா அப்படி யாரும் என்னிடம் வந்து டயலாக் சொல்லவில்லையே எனக் கூறினாராம். உடனே பாரதிராஜா “நான் சொல்லும் போது நீ உன் முடிய ரெடி பண்ணிக் கொண்டும் ஆடிக்கிட்டும் அல்லவா கேட்டுக் கொண்டிருந்தாய். அப்புறம் எப்படி கேட்கும் ?”என ஸ்பாட்டிலேயே சொல்லி இருக்கிறார்.
அவ்வளவுதான் அனைவர் முன்னிலையும் பாரதிராஜா இப்படி சொன்னதால் ஜெயசித்ராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். உடனே இந்த ஆளு இனிமேல் இங்கு இருந்தால் நான் வரமாட்டேன் என ஜெயசித்ரா சொன்னாராம். உடனே அங்கு இருந்தவர்கள் அனைவரும் பாரதிராஜாவை விரட்டி விட்டார்களாம். அட போங்கடா என சொல்லிவிட்டு அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் பாரதிராஜா.
இதையும் படிங்க : அந்த மாதிரி எந்த ஹீரோவும் செய்யமாட்டான்!.. இம்பாசிபிள்!. கமலை பாராட்டி தள்ளிய பாரதிராஜா…
