Cinema News
மாமன்னன் எஃபெக்ட்!. கமல் போட்ட கணக்கு!.. மீண்டும் அரசியல் படத்தில் வடிவேலு?!..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக மாற்றியவர் வடிவேலு. கவுண்டமணி படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள அந்த இடத்தை வடிவேலு பிடித்தார். சில படங்களில் வெற்றிக்கும் வடிவேலுவின் காமெடி காரணமாக இருந்தது. அவ்வப்போது சில படங்களில் காமெடி கலந்த குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பான நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தியிருந்தார்.
தேவர் மகன் படத்தை கமல் எடுத்தபோது வடிவேலுவுக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்தார். வடிவேலு ஏற்ற அந்த இசக்கி கதாபாத்திரத்தை மனதில் வைத்துதான் மாமன்னன் படத்தை உருவாக்கியதாக மாரி செல்வராஜ் மாமன்னன் பட விழாவில் பேசியிருந்தார். இது சர்ச்சையாகவும் மாறியது. கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜை சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர்.
கடந்த பல வருடங்களாக வடிவேலு அதிக படங்களில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் திரையுலகின் அவரை கைவிட்டதுதான். அதற்கு காரணம் அவரின் குணாதிசியம்தான். யாரையும் மதிக்கமாட்டார், யாருக்கும் உதவ மாட்டார், படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார்.. அதிக சம்பளம் கேட்பார் என இவர் மீது பல புகார்கள் உண்டு. அதேநேரம் மாமன்னன் படத்தின் வெற்றி வடிவேலுவை ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக அடையாளம் காட்டியுள்ளது. எனவே, மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்து வியந்த கமல்ஹாசன் ஒரு அரசியல் கதையில் அவரை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம். அது அவர் நடிக்கும் படத்திலா இல்லை வேறு படமா என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: கச்சிதமாக காய்நகர்த்திய சிவகார்த்திகேயன்.. கைவிட்ட உதயநிதி.. மாவீரன் வசூல் எல்லாம் போச்சே!…