என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க!.. ஜெயிலரை கொத்து பரோட்டா போட்ட புளூசட்டமாறன்….

Published on: August 11, 2023
bluesatta
---Advertisement---

தமிழ் சினிமாவில் விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் மசாலா படங்களை கழுவி ஊற்றி வருபவர் புளூசட்டமாறன். பெரிய நடிகர், பெரிய நிறுவனம் என எதையும் பார்க்க மட்டார். அந்த படத்தை பற்றி அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே ஓப்பனாக பேசுவது இவரின் வழக்கம். இதனாலேயே திரையுலகினருக்கு இவரை பிடிக்காது. இவர் மீது சில இயக்குனர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்களும் நடந்தது.

ஒருபக்கம் டிவிட்டரில் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களை கடுமையாகவும் விமர்சனம் செய்வதோடு, தொடர்ந்து கிண்டலடித்தும் வருகிறார். இதனால், அவர்களின் ரசிகர்களின் கோபத்தையும் சம்பாதித்துள்ளார். சமீபகாலமாக விஜய் மற்றும் ரஜினியை இவர் தொடர்ந்து நக்கலடித்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அடிக்க வறேன்னு சொன்னீங்க ஆளையே காணோம்!.. ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுக்கும் புளூசட்டமாறன்..

ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன பருந்து – காக்கா கதையில் தன்னைத்தான் அவர் காக்கா என சொன்னார் எனவும் புளூசட்டமாறன் பொங்கினார். அதோடு, தொடர்ந்து ஜெயிலர் பட ரிலீஸ் தொடர்பான செய்திகளை நக்கலடித்து வந்தார். மேலும், ரஜினி ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், ஜெயிலர் பட விமர்சனத்தை வெளியிட்ட அவர் அப்படத்தை செம நக்கலடித்து பேசியுள்ளார். கதை ஒரு நேர்க்கோட்டில் இல்லமால் பல ரூட்டில் பயணிக்கிறது. ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்திற்கு தேவையான கதையாக இருந்தும் நெல்சன் கோட்டை விட்டுள்ளார். பிளாக் காமெடி என சொல்கிறார்கள். ஆனால், யாருக்கும் சிரிப்பே வரவில்லை. பிளாக் காமெடியை வைத்து கதையையே கெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!.. வசூல் வேட்டையில் ஜெயிலர்!..

அனிருத்தின் இசை மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆனால், படம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, அவரின் இசை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. வில்லன் கதாபாத்திரமே வீக்காக இருக்கிறது. நினைத்த கதையை எடுக்க முடியாமல், நினைத்த ஹீரோவை வைத்து படம் எடுக்க முடியாமல் கிடைத்ததை வைத்து படம் எடுத்தால் இப்படித்தான் வரும். மொத்தத்தில் படம் வேஸ்ட்’ என அவர் பேசியுள்ளார்.

புளூசட்டமாறனின் விமர்சனம் ரஜினி ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மீது கோபத்தில் இருக்கும் புளூசட்டமாறன் இப்படத்தான் விமர்சனம் கொடுப்பார் என எதிர்பார்த்தோம். அதுதான் நடந்திருக்கிறது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீக்கான வில்லன்!.. சப்பை கேரக்டர்கள்!.. ஜெயிலர் படத்தின் மைன்ஸ்கள் இதுதான்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.