Connect with us
jailer

Cinema News

வீக்கான வில்லன்!.. சப்பை கேரக்டர்கள்!.. ஜெயிலர் படத்தின் மைன்ஸ்கள் இதுதான்…

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜெயிலர் திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் வெளியானது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்ததால் இந்த படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல், பீஸ்ட் படத்தால் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார் இயக்குனர் நெல்சன். அவருக்கும் ஜெயிலர் படத்தின் வெற்றி முக்கியமாக பார்க்கப்பட்டது. இன்று காலை வெளியான ஜெயிலர் திரைப்படம் துவக்கம் முதலே பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றது.

இதையும் படிங்க: தயவு செய்து ‘ஜெய்லர்’ படத்தை பத்தி தப்பா எதுவும் பேசிறாதீங்க! தியேட்டரில் நடந்த அசாம்பாவிதம்

கண்டிப்பாக இப்படம் ரஜினிக்கு ஹிட் அடிக்கும் எனவும், முதல்பாதி குடும்ப செண்டிமெண்ட், காமெடி எனவும், இரண்டாம் பாதி அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஜெயிலர் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதேநேரம் ஜெயிலர் படத்தில் பல மைன்ஸ்களும் இருக்கிறது. படத்தின் துவக்கத்தி்லேயே வரும் ரத்தமாறே பாடல் ரசிகர்களை துங்க வைத்து விடுகிறது. பாட்ஷா படத்தின் முதல் பாதி்யில் மாணிக்கமாக ரஜினி வந்தாலும் அதில் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், ஜெயிலர் அப்படி எதுவும் இல்லை. மு்தல் அரைமணிநேரம் பிளேடு போட்டுவிட்டார் நெல்சன்.

jailer

அதேபோல், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் புஷ்பா சுனில், மாகாளி சுனில் மற்றும் தமன்னா ஆகியோருடன் வரும் முக்கோண காதல் காட்சிகள் படத்திற்கு் தேவையில்லாத ஆணியாகவே இருக்கிறது. அதேபோல், நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை இப்படத்தில் வீணடித்திருக்கிறார் நெல்சன். அதேபோல், ரஜினியின் மகனாக வரும் வசந்த் ரவி, தமன்னா, மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர்களும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: எப்பா இது ‘ஜெய்லர்’ படமே இல்லை! ஆசையா போன ரசிகர்களுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி

முக்கியமாக, வில்லனாக வரும் விநாயகம் கதாபாத்திரமே குழப்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடூரமான வில்லனாக வரும் அவர் ரஜினியின் முன்னாடி டம்மியாகவே காட்டப்பட்டுள்ளார். அல்லது சுத்தியை வைத்து யாரையாவது கொலை செய்கிறார். என்ன நினைத்து நெல்சன் அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்தார் என்றே தெரியவில்லை.

முழுக்க முழுக்க ரஜினி மற்றும் அனிருத்தின் பின்னணி இசையை மட்டுமே நம்பி நெல்சன் ஜெயிலர் படத்தை எடுத்துள்ளது போல் தெரிகிறது. அதை அவர்கள் இரண்டு பேரும் நிரூபித்தும் உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசையை கழித்துவிட்டு பார்த்தால் படம் பெரிய வைப்ரேஷனை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

நெல்சன் இயக்கும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு கூட சுவாரஸ்யமான முக்கியத்துவம் இருக்கும். ஆனால், ஜெயிலர் படத்தில் ரஜினி கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதும் பெரிய மைனஸாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் படம் வொர்ஸ்ட்!.. ஃபேக் ஐடியில் வன்மம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!…

google news
Continue Reading

More in Cinema News

To Top