Cinema News
கே.பாலசந்தர் பேச்சை மீறி பாலிவுட் சென்ற ரஜினி.. கடுப்பாகி திரும்பி வந்தது இதனால்தான்..
நடிகர் ரஜினிகாந்த், 1975ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் கே.பாலசந்தர் தான் இவருக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தது. அடுத்ததடுத்து பல படங்களிலும் வாய்ப்பு கொடுத்தார்.
அதனால் ரஜினிகாந்த், இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களை குருநாதர் என்று தான் இன்றை வரை கூறுவார். எந்த ஒரு பெரிய முடிவு எடுப்பதாக இருந்தாலும், பாலசந்தரிடம் ஆலோசனை கேட்டு செய்துவந்தார் ரஜினி. ஆனால் ரஜினிகாந்த், இயக்குநர் பாலசந்தரின் பேச்சை மீறி தான் பாலிவுட்டிற்கு சென்றார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க-பாலய்யாவுக்கும் ஜெயிலர்ல சீன் வச்சிருந்த நெல்சன்.. இது ரஜினி படமா!.. இல்லை நண்பர்கள் மாநாடா?..
ரஜினிகாந்த்தும், கமலஹாசனும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், கமல்ஹாசன் பாலிவுட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு ஓரிரு படங்கள் ஹிட்டானது. அந்த நேரத்தில் ரஜினிக்கும் பாலிவுட் படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இது குறித்து பல முறை பாலசந்தரிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில், அமிதாப் பட்சனின் பல ஹிட் படங்களை ரஜினிகாந்த் தமிழில் நடித்திருந்தார். இதனையடுத்து, ரஜினி பாலிவுட்டில் நடிக்க விரும்புகிறார் என்ற விஷயம் கேள்விபட்டு, அமிதாப் பட்சன் ரஜினியை தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தார். ரஜினியும் பாலிவுட்டில் நடிக்க தொடங்கினார்.
ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் ஒரு படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில், எப்போதும் போல ரஜினி கொஞ்சம் வெளிப்படையாக பேசியதால், பிரச்சனை ஏற்பட்டது. என்னை இங்கு எல்லோரும் மதராசி என்கிறார்கள்.
என்னுடைய ஸ்டைலை மாற்ற சொல்கிறார்கள். கருப்பாக இருப்பதால் இங்கு ஒதுக்குகிறார்கள் என்று மேடையில் ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்ல விஷயம் தான். அதனால் தான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆனார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- ரஜினி, கமலை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா? வளர்த்துவிட்டவருக்கு காட்டும் நன்றிக்கடனா இது?