
Cinema News
எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…
Published on
By
எம்.ஜி.ஆர் நடிகராக சினிமாவில் நுழைந்த போதே கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் திரையுலகில் நுழைந்தவர் கலைஞர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்க துவங்கிய ராஜகுமாரி படத்திற்கு கதை, வசனம் எழுதியது கலைஞர்தான்.. அதன்பின் அபிமன்யூ, மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி ஆகிய படங்களுக்கும் கலைஞரே கதை, வசனம் எழுதியிருந்தார்.
எனவே, எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது. கலைஞரின் எழுத்து மீது எம்.ஜி.ஆருக்கு நல்ல அபிமானமும், அவர் மீது நல்ல மரியாதையும் இருந்தது. அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமாரி, காஞ்சித்தலைவன் ஆகிய படங்களுக்கு கலைஞரே கதை,வசனம் எழுதியியிருந்தார்.
எம்.ஜி.ஆர்- கருணாநிதி
கலைஞரும் எம்.ஜி.ஆரும் திமுகவில் இருந்தனர். திமுகவில் பொருளாளர் பதவியும் எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அண்ணாவின் மறைவுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்.ஜி.ஆர் அதிமுக எனும் தனிக்கட்சி துவங்கியதுதான் வரலாறு. இப்போதுவரை திமுகவுக்கு போட்டியாகவே அதிமுக களத்தில் இருக்கிறது.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் ஒரு படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுத மாட்டேன் என மறுத்த சம்பவம் பற்றி இங்கே பார்ப்போம். 1954ம் வருடம் எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மலைக்கள்ளன். இப்படத்தை எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவர் தயாரித்து இயக்கியிருந்தார். இந்த படம் உருவான போது இப்படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைத்த அவர் கலைஞரிடம் இதுபற்றி பேசினார்.
இதையும் படிங்க: ஏவிஎம் நிறுவனத்துடன் மோதலா?… ‘அன்பே வா’ படத்துக்கு பின் ஏன் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை?…
ஆனால், கலைஞர் ‘நான் எழுத மாட்டேன்’ என மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் ‘இது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய கதை. அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வைத்திருந்தாலும் அவர் காங்கிரஸை சேர்ந்தவர். எனவே, நான் வசனம் எழுதினால் ரசிகர்கள் ஏற்பார்களா என்பதில் எனக்கு அச்சம் இருக்கிறது. எனவே, நான் எழுத மாட்டேன்’ என சொன்னாராம். இந்த தகவலை ஸ்ரீராமுலு நாயுடு எம்.ஜி.ஆரிடம் சொல்லி ‘நீங்கள் கலைஞரிடம் பேசுங்கள். நீங்கள் சொன்னால் அவர் சம்மதிப்பார்’ என சொல்ல எம்.ஜி.ஆர் கருணாநிதியை சந்தித்தார்.
’ராமலிங்கம் பிள்ளை காங்கிரஸ் காரர்தான். ஆனால், இந்த கதையில் எந்த கட்சி பிரச்சாரமும் இல்லை. நீங்கள் வசனம் எழுதினால்தான் படம் சிறப்பாக வரும் என நான் நினைக்கிறேன். ஸ்ரீராமுலுவும் இதையேதான் நினைக்கிறார். நீங்கள் வசனம் எழுதினால்தான் படத்தை தயாரிப்பேன் என்கிறார் அவர். நான் கதாநாயகன்.. நீங்கள் வசனகர்த்தா என நமது காம்பினேஷன் இருந்தால் மட்டுமே இந்த படம் சிறப்பாக அமையும். எனவே, நீங்கள் இந்த படத்திற்கு வசனம் எழுதுங்கள்’ என கோரிக்கை வைத்தார். அதை கலைஞர் கருணாநிதியும் ஏற்றுக்கொண்டார்.
பொதுவாக அனல் பறக்கும் அரசியல் வசனங்களை எழுதுவதுதான் கலைஞரின் ஸ்டைல். ஆனால், மலைக்கள்ளன் படத்தில் அழகு தமிழில் காதல் ரசம் சொட்ட சொட்ட வசனம் எழுதியிருந்தார். அந்த வசனங்களை அழகாக பேசியிருப்பார் எம்.ஜி.ஆர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி படமாக மாறிய எம்.ஜி.ஆர் படம்!. பரபரப்பு திருப்பம்!.. நடந்தது இதுதான்…
தெலுங்கு சினிமாவில் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில்...
Dude: லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்கள் கொடுத்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருப்பவர் பிரதீப்...
Karuppu: ரேடியோ தொகுப்பாளராக இருந்து சுந்தர்.சி கேட்டுக் கொண்டதால் அவர் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சின்ன...
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரின்...
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...