Entertainment News
வனிதா பொண்ணுக்கு 18 வயசு ஆகிடுச்சாம்!.. விஜய் பையனுக்கு அடுத்த ஹீரோயின் பார்சல்!..
வனிதா விஜயகுமார் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானதே நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தில் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்நிலையில், விஜய் மகனுக்கு ஜோடியாக வனிதா விஜயகுமாரின் மகளை களமிறக்குவாரா? என்கிற கேள்வி அவரது லேட்டஸ்ட் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூடிய சீக்கிரமே சினிமாவில் ஹீரோவாகப் போகிறார் என கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், விஜய் மகனுக்கு ஜோடியாக நடிகை தேவையானியின் மூத்த மகள் ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் சமீபத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.
இதையும் படிங்க: யூடூ ப்ரூட்டஸ்!.. விஜய் முதுகில் விக்ரமும் குத்தப் போறாராம்!.. என்னடா இது லியோ வசூலுக்கு வந்த சோதனை?..
18 வயசு புயலான வனிதா மகள்:
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது மூத்த மகள் ஜோவிகாவுக்கு 18 வயது ஆன நிலையில், ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரம்மாண்டமாக பிறந்தநாள் பார்ட்டியை நடத்தி போட்டோஷூட்டையும் நடத்தி உள்ளார்.
அந்த புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ள நிலையில், அதை பார்த்த வனிதா விஜயகுமார் ரசிகர்கள் ஜோவிகா அப்படியே ஹீரோயின் மாதிரியே இருக்காங்க என்றும் கோலிவுட்டுக்கு புதிய ஹீரோயின் வனிதா வீட்டில் ரெடியாகி வருகிறார் போல என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தவங்கலாம் லைக் பண்ணுங்க!. வேற லெவலில் வெறியேத்தும் யாஷிகா!…
விஜய் மகனுக்கு ஜோடியாவாரா?
மேலும், சில ரசிகர்கள் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் 1995ம் ஆண்டு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகம் ஆனதை போல வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக அறிமுகமானால் சூப்பராக இருக்கும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஜோவிகாவை வைத்து சமையல் யூடியூப் சேனல் வீடியோக்களை பதிவிட்டு வந்த வனிதா விஜயகுமார் அடுத்து அவரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்துவாரா? அல்லது படிப்பில் கவனம் செலுத்த வைத்து வேறு தொழில்களில் ஈடுபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.