Connect with us
biggboss

latest news

வீடு மட்டும் ரெண்டு இல்ல! இதுவும்தான் – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை அள்ளிவிடும் பிக்பாஸ் சீசன்7

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 முடிந்து 7வது சீசனில் அடியெடுத்து வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. வெற்றிகரமாக 6 சீசனையுன் கடந்த பிக்பாஸ் இப்போது 7வது சீசனில் என்ட்ரி ஆகிறது.

அக்டோபர்  மாதம் முதல் வாரத்தில் இந்த சீசன் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த முறை முற்றிலும் வித்தியாசத்தை கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதற்கான புரோமோ வீடியோ வெளியாகி ஓரளவு என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பதை தெளிவு படுத்தி விட்டது.

இதையும் படிங்க : அப்பாகிட்ட மட்டுமில்ல மகனுடன் கூட விஜய் பேசுவது இல்லையா? இயக்குனர் எண்ட்ரி கூட சொல்லவில்லையாம்!

இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் இருக்கப் போவதாகவும் தனித்தனியே அதை கவனிக்க போவதாகவும் சொல்லப்பட்டது. அதனை அடுத்து இன்னொரு சர்ப்ரைஸையும் கொடுத்துள்ளது விஜய் டிவி.

எப்பவும் வீட்டில் பிக்பாஸ் ஒலி ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த வாய்ஸ் சதீஷ் சாரதி சாஷோ என்பவரின் வாய்ஸ். ஆனால் இந்த முறை இரண்டு வீடு என்பதால் இரண்டு பிக்பாஸ் வாய்ஸ் கேட்கப்போகிறதாம்.

இதையும் படிங்க : ரொம்ப சீன போடாதீங்க… இதுக்காக தான் இந்த பில்டப்பா? நெல்சன், அட்லீயின் பேச்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

அதில் ஒன்று வழக்கம் போல சாரதியின் வாய்ஸ். மற்றொரு வீட்டில் ஒலிக்கப்போவது ஒரு பெண் குரல் என்று சொல்லப்படுகிறது. அதற்கான வாய்ஸ் தேடலை பிக்பாஸ் குழு நடத்திக் கொண்டிருக்கிறதாம். மேலும் ஏற்கனவே இந்த சீசனில் பயில்வான் ரெங்கநாதன்,ரேகா நாயர், நியூஸ் வாசிப்பாளர் ரஞ்சித், கோவை பஸ் டிரைவர் சர்மிளா, ம.கா.பா, ஜாக்குலின் என முக்கிய பிரபலங்கள் கலந்து  கொள்ள இருக்கிறார்கள்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top