Cinema History
அன்பே வா படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன ஏவிஎம் சரவணன்…
எம்.ஜி.ஆர் சிறு வயது முதலே பல கஷ்டங்களை சந்தித்தவர். பசியால் வாடியவர். வறுமையின் உச்சத்தை பார்த்தவர். வீட்டில் உணவில்லை… நல்ல உடையும் இல்லை. நாடகத்திற்கு சென்றால் தன் மகன்களுக்கு மூன்று வேளை உணவும், உடுத்த உடையும் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்திற்காக எம்.ஜி.ஆரையும், அவரின் சக்கரபாணியையும் அவரின் அம்மா நாடகத்தில் நடிக்க அனுப்பி வைத்தார்.
எனவே, 7 வயது முதலே நாடக கொட்டகையில் வளர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். அப்போதே தான் சம்பாதிக்கும் பணத்தில் சக கலைஞர்களுக்கும், வேலை இல்லாமல் இருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பார்.
இதையும் படிங்க: 12 நாளில் எடுத்து சூப்பர் ஹிட் அடித்த எம்.ஜி.ஆர் படம்!.. அட அந்த படமா?!…
கஷ்டப்படும் மக்களை பார்த்தே வளர்ந்தவர் என்பதால் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே அவருக்கு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரின் அறிவுரையே எம்.ஜி.ஆரை கடைசிவரை வழிநடத்தியது. தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற தாகம் கொண்டவராக எம்.ஜி.ஆர் கடைசிவரை இருந்தார்.
அதனால், சம்பாதித்த பணத்தில் பெருமளவு எல்லோருக்கும் அள்ளி கொடுத்தார். உதவி கேட்டு வந்தவர்களுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தார். அதனால்தான் அவரை வள்ளல் என அழைத்தனர். அவர் முன்னால் யார் கஷ்டப்பட்டாலும் சரி அது ஏழையோ, பணக்காராரோ எந்த பேதமும் பார்க்காமல் அவருக்கு உதவுவார். அதுதான் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்…
ஏவிஎம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் அன்பே. இப்படம் உருவான போது அப்போது இளைஞராக இருந்த ஏவிம் சரவணன் தயாரிப்பு பணிகளை செய்து கொண்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்லாவில் நடந்து கொண்டிருந்த்து. சிம்லாவில் கடும் குளிர் வீசியதால் சரவணனுக்கு தொண்டை வரண்டு போனது. அதோடு, கடும் குளிரில் அவதிப்பட்டார். இதனால், படப்பிடிப்பு தளத்திற்கு கூட வராமல் காரிலேயே முடங்கி கிடந்தார்.
அவரின் நிலையை பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு கண்ணாடி ட்ம்ளரில் சூடான பாலை எடுத்து வந்து காரின் கதவை திறந்து அவரிடம் கொடுத்தார். அதைப்பார்த்த சரவணன் ‘இதற்காக நீங்கள் வர வேண்டுமா?.. யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே’ என பதறிப்போனார், எம்.ஜி.ஆரோ ‘கொடுத்திருக்கலாம். ஆனால், வேறு யாரேனும் வந்தால் எதாவது சாக்கு போக்கு சொல்லி நீங்கள் குடிக்காமல் போகலாம். நான் கொடுத்தால் கண்டிப்பாக குடிப்பீர்கள் அல்லவா!. உங்கள் தொண்டை வலிக்கு இந்த சூடான பால் இதமாக இருக்கும் குடியுங்கள்’ என சொல்ல சரவணன் நெகிழ்ந்து போனாராம்.
தன்னை சுற்றி இருப்பவர்கள் உடல் நலத்திலும், வாழ்விலும் தனி அக்கறை கொண்டவராகவே எம்.ஜி.ஆ இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு பாட்டெழுதாம வெளிய போக முடியாது!. கண்ணதாசனை அறையில் பூட்டிய எம்.ஜி.ஆர்….