தனி ஒருவன்2 படத்திற்கு வில்லனாக போகும் மாஸ் பாலிவுட் ஹீரோ..வேற லெவல்ல யோசிக்கும் படக்குழு..

Published on: September 8, 2023
thani oruvan movie
---Advertisement---

மோகன் ராஜா தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர். இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரவியின் அண்ணன். தனது தம்பியை வைத்து ஜெயம் படத்தை இயக்கியவரும் இவரே. இவர் மேலும் தனது தம்பியை வைத்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி, உனக்கும் எனக்கும் என பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவை அனைத்து வெற்றிபடங்களாவே அமைந்தன. இவர் 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் என்ற திரைப்படத்தினை தனது தம்பியை வைத்து இயக்கினார்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். முன்னணி நட்சத்திரங்கள் வில்லனாக நடிக்கும் ஸ்டைலை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இவரே. இவரின் சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் ரசிகர்களிடையே மிகவும் அதிக அளவில் பேசப்பட்டது.

இதையும் வாசிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரவிருப்பதாக இப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்திலும் ரவிக்கு ஜோடியாக நயன் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் தன் முதல் பாகத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்திற்கு வில்லனை இனிதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என இயக்குனர் கூறியிருந்தார்.

இதனை பற்றிய தகவல்கள் சமீபத்தில் கசிந்துள்ளது. இப்படத்தில் வில்லன் கெட்டப்பில் விக்ரம், மாமன்னன் படத்தின் மூலம் பிரபலமடைந்த பகத் ஃபசிலை நடிக்க கேட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர் பல மலையாள படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பொதுவாக எதிர்மறையான கேரக்டரிலேயே நடித்து வருகிறார். ஆனால் தொடர்ந்து வில்லன் கேரக்டரிலேயே தான் நடித்து வருவதால் இந்த ரோலுக்கு இவர் ஒப்பு கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

இதையும் வாசிங்க: இந்த பிரபல நகைச்சுவை நடிகரின் பேரன்தான் ஜெயம் ரவியா? இது தெரியாம போச்சே!..

அதனால் படக்குழு தற்போது பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சானின் மகனான அபிஷேக் பச்சானை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு இது வரை தெரியப்படுத்தவில்லை. ஆனால் அரவிந்த் சாமி போன்ற மிகபெரிய நடிகரின் இடத்திற்கு நிச்சயமாக மிக பெரிய நட்சத்திரத்தையே படக்குழு தேர்வு செய்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையும் வாசிங்க: தமிழ் சினிமாவே வேணாம் போங்கடா!. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கிய ஜெயம் ரவி பட இயக்குனர்!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.