என் படத்தை எனக்கே போட்டு காட்டினாலும் நீதான்டா அடுத்த ஆடு! ‘ஜவான்’ வெற்றி கமலை எப்படியெல்லாம் மாத்திடுச்சு?

Published on: September 15, 2023
kamal
---Advertisement---

Actor kamal : தமிழ் சினிமா ஒரே போட்டி களமாக மாறிவிட்டது. ஒரு பெரிய வெற்றியை பார்த்ததும் அடுத்து அதை வைத்து நமக்கு என்ன லாபம் பார்க்கலாம் என்றுதான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜவான்.

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் , நயன் , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஜவான். அனிருத் இசையில் இந்தப் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: அவங்களுக்கு வெண்ணெய்.. எங்களுக்கு சுண்ணாம்பா… டாப் நாயகர்களுக்கு ரெட் கார்டு… ஆட்டம் காணும் கோலிவுட்?!

பதான் படத்தை அடுத்து ஜவான் படமும் ஷாரூக்கானுக்கு ஒரு பெரிய மகுடத்தை பாலிவுட் வட்டாரத்தில் சூட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ஷாரூக்கான் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சந்தோஷத்துடன் மீண்டும் அட்லீயுடன் இணைய ஷாரூக்கான் ஆசைப்படுகிறாராம். ஒரு வேளை ஜவான் 2வாக கூட இருக்கலாம் என வழக்கம் போல நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தாலும் அட்லீயுடன் ஷாரூக்கான் மீண்டும் இணைவது ஓரளவு உறுதியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: ஷூட்டிங் வரது கிடையாது… காசு மட்டும் வேணும்… ரெட் கார்ட் நடிகரை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்!

அதுமட்டுமில்லாமல் அட்லீயும் ஷாரூக்கானிடம் ஒரு ஆலோசனை கூறியிருக்கிறாராம். அதாவது இந்தப் படத்தில் கமலை நடிக்க வைத்தால் இன்னும் பெரிய ஹைப்பை உண்டாக்கும் என சொல்லியிருக்கிறார். அதற்கு ஷாரூக்கான் கமலா? அவரிடம் நானே பேசுகிறேன் என்று கூறினாராம். ஏற்கனவே கமலும் ஷாரூக்கானும் ஹேராம் படத்தில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் கமல் மறுக்க மாட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஜவான் பட வெற்றியால் கமலின் ராஜ்கமல் நிறுவனம் அட்லீயை கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது. தன்னுடைய நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறதாம். இதே கமல்தான் ஒரு சமயம் மெர்சல் பட நேரத்தில் தன்னை பார்க்க வந்த அட்லீக்கு அபூர்வ சகோதரர்கள் படத்தின் புகைப்படத்தை காட்டி மெர்சலாக்கினார்.

இதையும் படிங்க: இப்படியொரு காமெடி வில்லனை பார்த்திருக்கவே மாட்டீங்க!.. மாஸ் காட்டியதா மார்க் ஆண்டனி?.. விமர்சனம் இதோ!..

ஆனால் இப்போது அதே அட்லீயிடம் தன் நிறுவனத்திற்காக படம் பண்ண கேட்கிறார். ஒரு வேளை இந்த நிறுவனத்தின் மூலமாக கூட ஷாரூக்கான், கமல், அட்லீ இணைந்து உருவாகும் திரைப்படமாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.